உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

165

வடமொழியில் அர்த்த சாஸ்திரம் என்னும் பொருளியல் நூலை எழுதிய கௌடல்லியர், அந்நூலில் சேர நாட்டு முத்துக்களைப் பற்றியும் கூறுகிறார். புகழ்பெற்ற அர்த்தசாஸ்திரத்தை எழுதிய கௌடல்லியர், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே மகதநாட்டை அரசாண்ட சந்திரகுப்த மௌரியரின் (அசோக சக்கரவர்த்தியின் பாட்டனின்) அமைச்சராக இருந்தார் என்பது யாவரும் அறிந்த தொன்றே. அர்த்தசாஸ்திரத்தின் மூன்றாம் பகுதி, பதினோராம் அதிகாரத்தில், பல தேசத்து முத்துக்களைப் பற்றி அவர் கூறுகிறார். முதலில் தாம்பரபர் ணிகம். பாண்டிய கவாடகம் என்னும் முத்துக்களைக் கூறுகிறார். இப்பெயர்களிலிருந்தே இவை பாண்டிய நாட்டில் உண்டான முத்துக் கள் என்பதை அறிகிறோம். பிறகு பாஸிக்கியம் என்னும் முத்தைக் கூறுகிறார். பாஸிக்கியம் என்பது மகதநாட்டில் பாடலிபுரத்துக்கு அருகில் உண்டான முத்து. பின்னர் கௌலேயம் என்னும் முத்தைக் கூறுகிறார். கௌலேயம் என்பது இலங்கையில் ஈழநாட்டில் உண்டான முத்து. அதன்பிறகு கௌர்ணேயம் என்னும் முத்தைக் கூறுகிறார். கௌர்ணேயம் என்பது சேரநாட்டிலே மேற்குக் கடலிலே உண்டான முத்து.

6

கௌடல்லிய அர்த்தசாஸ்திரத்துக்குத் தமிழ்-மலையாளத்தில் பழைய உரை எழுதிய ஒருவர், இதைப்பற்றி நன்றாக விளக்கி எழுதியுள்ளார். பெயர் அறியப்படாத இந்த உரையாசிரியர், தமிழிலி ருந்து மலையாளமொழி தோன்றிக்கொண்டிருந்த காலத்தில் இருந்தவர். ஆகவே, இவருடைய உரை தமிழ்-மலையாள வசன நடையாக அமைந்துள்ளது. இந்த உரையாசிரியர் ‘கௌர்ணேயம்’ என்னும் சொல்லை இவ்வாறு விளக்குகிறார். “கௌர்ணேயமாவிது மலநாட்டில் முரசி ஆகின்ற பட்டினத்தினருகே சூர்ண்ணியாற்றி" என்று விளக்கம் கூறியுள்ளார். இதைத் தமிழில் சொல்லவேண்டுமானால், 'கௌர் ணேயம் ஆவது மலைநாட்டில் முரசி ஆகிய பட்டினத்தின் அருகே சூர்ண்ணி ஆற்றில் உண்டாவது” என்று கூறவேண்டும்.

இந்த உரையில் முரசி பட்டினமும் சூர்ணியாறும் கூறப்படு கின்றன. இவற்றை விளக்க வேண்டும். முரசி என்பது முசிறி. புறநானூறு முதலிய சங்க நூல்களிலே கூறப்படுகிற முசிறிப்பட்டனம் இதுவே. யவன வாணிகர், மரக்கலங்களில் வந்து வாணிகம் செய்த துறைமுகங்களில் இதுவும் ஒன்று. யவனராகிய கிரேக்கர் முசிறியை