உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -13

காயுஞ் சினத்தையுடைய அவுணர் வஞ்சத்தால் செய்யும் கொடுந்தொழிலைப் பொறாளாய் மாயோளால்

ஆடப்பட்ட மரக்காலென்னும் பெயரையுடைய ஆடல் டல்” என்று இதற்கு உரை கூறுகிறார் அடியார்க்கு நல்லார்.

இவ்வாடலுக்கு நான்கு உறுப்புக்கள் உண்டு.

பாவைக்கூத்து : போர் செய்வதற்குக் போர்க் கோலங்கொண்டு வந்த அவுணரை மோகித்து விழுந்து இறக்கும்படி திருமகள் ஆடிய கூத்து இது.

"செருவெங் கோலம் அவுணர் நீங்கத்

திருவின் செய்யோள் ஆடிய பாவை

என்பது சிலப்பதிகாரம்.

“அவுணர் வெவ்விய போர் செய்வதற்குச் சமைந்த போர்க்கோலத்தோடு மோகித்து விழும்படி கொல்லிப் பாவை வடிவாய்ச் செய்யோளாகிய திருமகளால் ஆடப்பட்ட பாவை யென்னும் ஆடல்” என்பது அடியார்க்கு நல்லார் உரை.

இப்பாவைக் கூத்து மூன்று உறுப்புக்களையுடையது.

பதினோராடல்களைத் தவிர்த்து சிலவகைக் குரவைக் கூத்துக் களும் ஆடப்பட்டன. குரவைக் கூத்தை மகளிர் ஆடினார்கள்.