உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் ஓவியம் - அணிகலன்கள் /207

இயற்றப்பட்டவை. பெருங்கதையும் அக்காலத்ததே. பெருங்கதையின் முற்பகுதியும் பிற்பகுதியும் மறைந்துவிட்டன. சங்ககாலத்துப் பாரதமும், இராமாயணமும் முழுவதும் மறைந்துவிட்டன. பதினென் கீழ்க்கணக்கில் ஒன்றெனப் பிற்காலத்தவரால் சேர்க்கப்பட்ட திருக்குறள் சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகும்.

இடைக்கால இலக்கியம்

இடைக்கால இலக்கியங்கள் என்று நாம் பிரித்துக் கூறியது, கி.பி. 300க்கும் 15-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தையாகும். இக்காலத்தில் உண்டான இலக்கிய நூல்கள் மிகப் பல. பதினெண் கீழ்க்கணக்குகளில் சிலவும், தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம் முதலிய பக்திப் பாடல்களும், சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, வளையாபதி, பாரத வெண்பா, கம்பராமாயணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய இனிய காவியங்களும், ஆதியுலா முதலிய உலாக்கள், திருவாரூர் மும்மணிக்கோவை முதலிய மும்மணிக் கோவைகள், பொன்வண்ணத்தந்தாதி முதலிய அந்தாதிகள், நந்திக்கலம்பகம் முதலிய கலம்பகங்கள், கலிங்கத்துப்பரணி முதலிய பரணிகள், முத்தொள்ளாயிரம், நான்மணிமாலை முதலிய பிரபந்த நூல்கள் முதலிய இலக்கியங்கள் ஏராளமாகத் தோன்றின. இந்நூல்களின் பட்டியலைக் கூறுவதென்றால் இடம் விரியும்.

பிற்கால இலக்கியம்

15-ம்

பிற்கால இலக்கியங்கள் என்று கூறியது கி.பி. நூற்றாண்டுக்குப் பிறகு உண்டான இலக்கியங்களை. இக்காலத்தில் காகிதம், பேனா முதலிய எழுது கருவிகள் தோன்றி ஓலைச் சுவடிகளும் எழுத்தாணிகளும் மறையத் தொடங்கின. அச்சு யந்திரங்கள் ஏற்பட்டு அச்சுப் புத்தகங்களும் தோன்றலாயின. இக்காலத்தில்தான் இலக்கியங்கள் பெருகிவரத் தொடங்கின. மொழிபெயர்ப்பு நூல்களும் அதிகமாகத் தோன்றின. சிந்து, பள்ளு, குறவஞ்சி, நொண்டி, காதல் முதலிய பிற்காலத்துப் பிரபந்த நூல்களும் ஸ்தல புராணங்களும் தேம்பாவணி, இரக்ஷண்ய யாத்திரிகம், சீறாப்புராணம் முதலிய கிறிஸ்துவ இஸ்லாமிய நூல்களும், பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் முதலிய நாவல் என்னும் நவீன இலக்கியங்களும் ஏராளமாகத் தோன்றின.