உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

9. நடுவுநிலை என்பது யாதொன்றாலும் விகாரப் படாமை. நடுவுநிலை எனினும் மத்திமம் எனினும் சாந்தம் எனினும் ஒக்கும்.’

ריי

சுவையை மெய்ப்பாடு என்றுங் கூறுவர். மெய்யின்கண் (உடம்பில்) தோன்றுதலின் மெய்ப்பாடு எனப் பெயர்பெற்றது. இந்த ஒன்பது மெய்ப்பாடு (சுவை)களில் நடுவுநிலை என்னும் சுவையை நீக்கி எட்டு மெய்ப்பாடுகளை மட்டும் தொல்காப்பியர் கூறுகிறார்.

66

"நகையே யழுகை யிளிவரன் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென்

றப்பா லெட்டாம் மெய்ப்பா டென்ப.

என்பது சூத்திரம்8

எட்டுவகை மெய்ப்பாடு (சுவை) களையும் அவை தோன்றும் காரணங்களையும் தொல்காப்பியர் விளக்குகிறார், அவற்றைக் காட்டுவோம்.

1. வீரம் அல்லது பெருமிதம்

“கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்

66

சொல்லப் பட்ட பெருமித நான்கே.

“இச் சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதமென் றெண்ணினான்; என்னை? எல்லாரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதமெனப்படும் என்றற் கென்பது" (பேராசிரியர் என்னும் உரையாசிரியர் கூறும் விளக்கம் இது.)

2. அச்சம்

"அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே.

3. இழிப்பு

66

"மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு யாப்புற வந்த இளிவரல் நான்கே.

4. வியப்பு

66

99

‘புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே.