உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் ஓவியம் - அணிகலன்கள் 221

வாடிய வுறுப்பும் மயங்கிய நோக்கமும் பீடழி புலனும் பேசா திருத்தலும்

பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலும் அறைந்தனர் பிறவும் அறிந்திசி னோரே.

3. சோம்பினோன் அவிநயம்

66

“மடியின் அவிநயம் வகுக்குங் காலை நொடியொடு பலகொட் டாவிமிக வுடைமையும் மூரி நிமிர்த்தலும் முனிவொடு புணர்தலும் காரண மின்றி யாழ்ந்துமடிந் திருத்தலும் பிணியும் இன்றிச் சோர்ந்த செலவோடு அணிதரு புலவர் ஆய்ந்தனர் கொளலே.

4. களித்தோன் அவிநயம்

"களித்தோன் அவிநயம் கழறுங் காலை

99

ஒளித்தவை யொளியான் உரைத்தல் இன்மையும் கவிழ்ந்தும் சோர்ந்தும் தாழ்ந்தும் தளர்ந்தும் வீழ்ந்த சொல்லொடும் மிழற்றிச் சாய்தலும் களிகைக் கவர்ந்த கடைக்கணோக் குடைமையும் பேரிசை யாளர் பேணினர் கொளலே.

5. உவந்தோன் அவிநயம்

"உவந்தோன் அவிநயம் உரைக்குங் காலை நிவந்தினி தாகிய கண்மல ருடைமையும் இனிதின் இயன்ற உள்ளம் உடைமையும் முனிவின் அகன்ற முறுவனகை யுடைமையும் இருக்கையுஞ் சேறலும் கானமும் பிறவும் ஒருங்குடன் அமைந்த குறிப்பிற் றன்றே.

6. அழுக்காறுடையோன் அவிநயம்

66

99

'அழுக்கா றுடையோன் அவிநயம் உரைப்பின் இழுக்கொடு புணர்ந்த இசைப்பொரு ளுடைமையும் கூம்பிய வாயுங் கோடிய வுரையும்

ஓம்பாது விதிர்க்குங் கைவகை யுடைமையும்

ஆரணங் காகிய வெகுளி யுடைமையும்