உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் 223

10. உடன்பட்டோன் அவிநயம்

66

'சிந்தையுடம் பட்டோன் அவிநயம் தெரியின்

முந்தை யாயினும் உணரா நிலைமையும் பிடித்த கைமேல் அடைத்த கலினும் முடித்த லுறாத கரும நிலைமையும் சொல்லுவது யாதும் உணரா நிலைமையும் புல்லும் என்ப பொருந்துமொழிப் புலவர்.

11. உறங்கினோன் அவிநயம்

66

99

“துஞ்சா நின்னோன் அவிநயந் துணியின் எஞ்சுதல் இன்றி யிருபுடை மருங்கும் மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியும் அலர்ந்துயிர்ப் புடைய வாற்றலும் ஆகும்.

12. துயிலுணர்ந்தோன் அவிநயம்

66

""

“இன்றுயி லுணர்ந்தோன் அவிநயம் இயம்பின் ஒன்றிய குறுங்கொட் டாவியும் உயிர்ப்பும் தூங்கிய முகமுந் துளங்கிய வுடம்பும் ஓங்கிய திரிபும் ஒழிந்தவும் கொளலே.

13. செத்தோன் அவிநயம்

“செத்தோ னவிநயஞ் செப்புங் காலை அத்தக அச்சமும் அழிப்பும் ஆக்கலும் கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப் போத்ததுணி வுடைமையும் வலித்த உறுப்பும் மெலிந்த வகடும் மென்மைமிக வுடைமையும் வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலும் உண்மையிற் புலவர் உணர்ந்த வாறே.

14. மழை பெய்யப்பட்டோன் அவிநயம்

"மழைபெய்யப் பட்டோன் அவிநயம் வகுக்கின் இழிதக வுடைய வியல்புநனி யுடைமையும் மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை மெய்பூண் டொடுக்கிய முகத்தொடு புணர்த்தலும் ஒளிப்படு மனனில் உலறிய கண்ணும்