உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 225

19. கண்ணோவுற்றோன் அவிநயம்

66

'கண்ணோ வுற்றோன் அவிநயங் காட்டின் நண்ணிய கண்ணீர்த் துளிவிரற் றெறித்தலும் வளைந்தபுரு வத்தோடு வாடிய முகமும் வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமும் தெள்ளிதிற் புலவர் தெரிந்தனர் கொளலே.

20. தலைநோவுற்றோன் அவிநயம்

66

'தலைநோ வுற்றோன் அவிநயஞ் சாற்றின் நிலைமை யின்றித் தலையாட் டுடைமையும் கோடிய விருக்கையுந் தளர்ந்த வெரொடு பெருவிரல் இடுக்கிய நுதலும் வருந்தி ஓடுங்கிய கண்ணொடு பிறவும்

திருந்து மென்ப செந்நெறிப் புலவர்.

21. அழற்றிறம் பட்டோன் அவிநயம்

66

"அழற்றிறம் பட்டோன் அவிநயம் உரைப்பின் நிழற்றிறம் வேண்டு நெறிமையின் விருப்பும் அழலும் வெயிலும் சுடரும் அஞ்சலும் நிழலும் நீரும் சேறும் உவத்தலும் பனிநீர் ருவப்பும் பாதிரித் தொடையலும் நுனிவிரல் ஈரம் அருநெறி யாக்கலும் புக்க துன்பொடு புலர்ந்த யாக்கையும் தொக்க தென்ப துணிவறிந் தோரே.'

22. சீதமுற்றோன் அவிநயம்

“சீத முற்றோன் அவிநயம் செப்பின்

99

ஓதிய பருவரல் யுள்ளமோ டுழத்தலும் ஈர மாகிய போர்வை யுறுத்தலும் ஆர வெயிலும் தழலும் வேண்டலும்

முரசியும் முரன்றும் உயிர்த்தும் உரைத்தலும் தக்கன பிறவும் சாற்றினர் புலவர்.

99