உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் /227

என்பது சூத்திரம்.

இவ்வெட்டு வரிக் கூத்துகளையும் விளக்குவோம்.

1. கண்கூடுவரி. இது காட்சி எனவும் கூறப்படும். ஒருவர்

கூட்டாமல் தானே வந்து நிற்கும் நிலை.

கண்கூ டென்பது கருதுங் காலை

இசைப்ப வாராது தானே வந்து

தலைப்பெய்து நிற்குக் தன்மைத் தென்ப.

என்பது சூத்திரம்.

99

2. காண்வரி. நகை முகங் காட்டி வருகென வந்து போக வெனப் போகிய நடிப்பு.

66

'காண்வரி என்பது காணுங் காலை

வந்த பின்னர் மனமகிழ் வுறுவன

தந்து நீங்குந் தன்மையாதாகும்.

என்பது சூத்திரம்.

99

3. உள்வரி: உள்வரி என்பது தன்னுடைய உண்மை வடிவை மறைத்து மாறுவேடம் பூண்டு நடிப்பது. அதாவது ஏவலாளர் முதலியவர்போல வேடம் பூண்டு நடிப்பது.

“உள்வரி யென்பது உணர்த்துங்காலை மண்டல மாக்கள் பிறிதோ ருருவங்

கொண்டுங் கொள்ளாதும் ஆடுதற் குரித்தே."

என்பது சூத்திரம்.

4. புறவரி. தலைவனுடன் சேர்ந்திராமல் தனியே நின்று நடித்தல்.

66

'புறவரி யென்பது புணர்க்குங் காலை

யிசைப்ப வந்து தலைவன் முற்படாது புறத்துநின் றாடிவிடைபெறு வதுவே

என்பது சூத்திரம்.

5. கிளர்வரி. இருசாராருக்கும் நடுவே மத்தியஸ்த மாக நின்று

நடிப்பது.