உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

ல.....

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

தாருக்கும் காணியாகக் கொடுத்தோமென்று ஸ்ரீகாரியக் கண்காணி செய்வார்க்கும் கரணத்தார்களுக்கும் திருவாய் மொழிந்தருளி திருமந்திர ஓலை வந்தமையிலும், கல் வெட்டியது. திருவாலந் திருமுது குன்றனான விஜயராஜேந்திர ஆசாரியின் உடையார் வைய்காசிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேசுவர நாடகமாட இவனுக்கும் இவன் வம்சத்தார்க்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கும் இராஜகேசரியோடுக்கும் ஆடவலானென்னும் மரக்காலால் நித்த நெல்லுத் தூணியாக நூற்றிருபதின் கலநெல்லும் ஆண்டாண்டுதோறும் தேவர் பண்டாரத்தெய்பெறச் சந்திராதித்தவற் கல் வெட்டித்து.

وو

இந்த நாடகம் நெடுங்காலம் நடைபெற்று வந்தது. தஞ்சாவூரை மராட்டியர் கைப்பற்றி அரசாண்ட காலத்தில், ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்குமுன், இந்த நாடகம் நிறுத்தப் பட்டது.

தாலுகா

திருநெல்வேலி மாவட்டம் திருச்செந்தூர்த் ஆத்தூரிலுள்ள சோமநாதஈசுவரர் கோயில் அழகிய பாண்டியன் கூடம் என்னும் மண்டபம் இருந்தது. இதில் கூத்தும் நாடகமும் நடைபெற்றன. திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்டான் 5-ஆவது ஆண்டு சாசனம் ஒன்று இந்த மண்டபத்தில், திருமேனி பிரியாதான் என்னும் நாடக ஆசிரியன் திருநாடகம் என்னும் நாடகத்தை டுவதற்காக அவனுக்கு 2 மாநிலம் தானம் வழங்கப்பட்டதைக் கூறுகிறது.16

நாடகக் கலையின் மறைவு

சேர சோழ பாண்டிய அரசர்களும் குறுநில மன்னர்களும் மறைந்து அந்நியர் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே,- நவாபுகளும், பாளையக் காரர்களும், மராட்டியரும், தெலுங்க நாயக்கரும், போர்ச்சுகீசியர் ஒல்லாந்தர் பிரெஞ்சுக்காரர் ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பிய வர்த்தகக் கம்பெனிக் காரர்களும் அரசாண்ட காலத்திலே, 16, 17, 18, ஆம் நூற்றாண்டுகளிலே, குழப்பமும், கலகமும் கொள்ளையும் கூச்சலும் அராஜகமும் அநியாயமும் ஆட்சிபுரிந்த காலத்திலே-, தமிழ்நாட்டு நாடகக் கலை பெரிதும் அழிந்து விட்டது.

தமிழ்ப் பண்பும் தமிழ் நாகரிகமும் இல்லாதவர்கள் ஆட்சியில், அதுவும் குழப்பமும் கொள்ளையும் தாண்டவமாடிய காலத்தில், நாடகக் கலை புறக்கணிக்கப்பட்டது. நாடகக் கலைஞர் போற்றுவாரற்று மறைந்தனர். அவர்கள் மறையவே அவர்களிடமிருந்த நாடக