உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 237

வேனிற்காலம் வந்துவிட்டது. அரண்மனைப் பூஞ்சோலையிலே பலவகையான மலர்கள் அலர்ந்துள்ளன. அந்தப் பூக்களில் கோங்கி லவம் பூக்கள் முதன்மையாகச் சிறப்புப் பெற்றுள்ளன. பூஞ்சோலைக் காட்சிகளைக் கண்ட வயந்த திலகை என்னும் தோழிப்பெண் அரண்மனைக்கு வந்து இந்தச் செய்தியை அரசனிடங் கூறுகிறாள். "தேங்குலாம் அலங்கல் மாலைச் செறிகழல் மன்னர் மன்ன! பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக் கோங்கெலாம் கமழமாட்டாக் குணமிலார் செல்வமே போல் பாங்கெலாம் செம்பொன்பூப்ப விரிந்தது பருவம் என்றாள்”.

பொன்னிறமுள்ள கோங்குமலர் கண்ணைக் கவரும் அழகுள்ளது. தங்கந்தான் கோங்காகப் பூத்ததோ என்று கருதும்படி இருக்கிறது. அதன் எழிலும் செவ்வியும் இவ்வளவு அழகான சிறந்த கோங்கு மலருக்கு அந்தோ, மணமல்லையே! மணமிருந்தால் இது எவ்வளவு சிறப்பாக இருக்கும்!

இந்த

அழகான செய்யுளுக்கு 'மணம் கொடுப்பது 'கோங்கெலாம் கமழமாட்டாக் குணமிலார் செல்வமே போல்' என்னும் அடி. இச்செய்யுளைப் படிக்கும்போது மனம் இன்பம் அடைகிறது. பணமிருந்தும் ஈகைக் குணம் இல்லாதபடியால், செல்வர் புகழ் பெறவில்லை. கோங்குக்கு அழகு இருந்தும் மண மில்லாதபடியால் புகழ் பெறவில்லை. செல்வர்க்கு ஈகைக்குணமும், கோங்குக்கு நறுமணமும் இருந்தால் இரண்டும் சிறப்படையும் அல்லவா?

கவிதைப் பேராறு

காவியப்புலவன் கம்பனுடைய சொல்லோவியங்கள் சில வற்றைப் பார்ப்போம். இராமனும் இலக்குவனும் கோதாவரியாற்றைக் கண்டதைக் கம்பர் கூறுகிறார். அந்தப் பெரிய ஆறு, காவியப்புலவரின் கவிதைபோலக் காட்சியளித்தது என்று கூறுகிறார்.

"புவியினுக் கணியாய் ஆன்ற

பொருள்தந்து புலத்திற் றாகி

அவியகத் துறைகள் தாங்கி

ஐந்திணை நெறி யளாவிச்

சவியுறத் தெளிந்து தண்ணென்

றொழுக்கமும் தழுவிச் சான்றோர்