உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

ர்

உருவங்களிற் பயின்றோர், நுண்ணுணர் வுடையராயின், புதிய உருவங்களை எளிதின் அமைப்பர். முன்னிருந்து இறந்துபட்ட உருவங்களை ஆராய்ந்து கண்டறிதற்கும், அத்தகைய பயிற்சியும், நுண்ணுணர்வும் வேண்டப்படுபவேயாம்.'3

இவ்வாறு அடிகளார், அழகுக்

இலக்கணத்தை விளக்கிக் கூறினார். நிற்க,

கலைகளின்

பாது

இனி, தமிழ் நாட்டிலே நமது முன்னோரால் வளர்க்கப்பட்ட பழைய அழகுக் கலைகளைப் பற்றித் தனித்தனியே ஆராய்வோம்.

அடிக்குறிப்புகள்

1. மனிதன், மிருக வாழ்க்கையிலிருந்து நாகரிக வாழ்க்கை யடைந்த வரலாற்றைக் கூறும் நூலுக்கு ஆந்த்ரபாலஜி (Anthropology) என்பது பெயர். இந்நூல்கள் ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.

2. Architecture and Sculpture.

3. யாழ்நூல், பக்கம் 361-362