உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 267

எல்லாம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக அமைந்திருக் கின்றன. பாரத நாட்டு அழகுக் கலைகளும் கிரேக்க, ரோம நாடுகளின் நுண்கலைகளும் சீன, சப்பான் நாடுகளின் இன்கலைகளும் ஏனைய நாடுகளின் கவின் கலைகளும் வெவ்வேறு விதமாக அமைந்திருப்பது இக்காரணம் பற்றியே.

கட்டடம், சிற்பம், ஓவியம், இசை, காவியம் என்று அழகுக் கலைகள் ஐந்து வகைப்படும் என்று கூறினோம். இவற்றின் இயல்பைச் சற்று விளக்கிக் கூறுவோம். நுண் கலைகளைக் கண்ணால் கண்டும் காதினால் கேட்டும் மனத்தினால் உணர்ந்தும் மகிழ்கிறோம்.

கண்ணால் கண்டு இன்புறத் தக்கது கட்டடக்கலை. கோயில்கள், மாடமாளிகைகளின் கட்டட அமைப்பு காட்சிக்கு இன்பம் தருகின்றது. பருப்பொருளாகவும் உயர்ந்தும் உள்ளபடியால் கட்டடக் கலையைத் தூரத்தில் இருந்தும் பார்த்து மகிழ்கிறோம். கட்டடங்களின் அழகை மிக அருகில் இருந்து முழுவதும் காண முடியாது. ஆகவே இதனைச் சற்றுத் தூரத்திலிருந்தே காண வேண்டும்.

இரண்டாவதாகிய சிற்பக்கலை, கட்டடக் கலையைவிட நுட்பமானது. கல், சுதை, உலோகம், மரம் முதலான பொருள்களினால் மனிதர், விலங்கு, பறவை, தாவரம் முதலான இயற்கைப் பொருள்களின் வடிவத்தையும் கற்பறையாகக் கற்பித்து அமைக்கப் பட்ட பொருள்களின் உருவத்தையும் அமைப்பதுதான் சிற்பக்கலை. சிற்பக் கலையைக் கண்ணால் கண்டு மகிழ்கிறோம்.

மூன்றாவதாகிய ஓவியக்கலை, பருப்பொருளான சிற்பக் கலையைவிட நுட்பமானது. உலகத்திலே காணப்படுகிற எல்லாப் பொருள்களின் உருவத்தையும், உலகத்தில் காணப்படாத கற்பனைப் பொருள்களின் வடிவங்களையும் பலவித நிறங்களால் இயற்கையழகு பொருந்த எழுதப்படுகிற படங்களே ஓவியக் கலையாம். வண்ணங்கள் தீட்டப்படாமல் வெறுங் கோடாக வரையப்படும் ஓவியங்களைப் புனையா ஓவியம் என்பர். முற்காலத்தில் சுவர் களிலும் பலகைகளிலும் துணிகளிலும் ஓவியங்கள் எழுதப்பட்டன. படம் என்னும் சொல் படாம் என்னும் சொல்லிலிருந்து உண்டானது. படாம் என்றால் துணி என்பது பொருள். ஓவியக் கலைகளை அருகிலிருந்து கண்ணால் கண்டு மகிழ்கிறோம்.

நான்காவதாகிய இசைக்கலையைக் கண்ணால் காண முடியாது. இதனைக் காதினால் கேட்டு இன்புறுகிறோம். இசைக் கலைக்குத்