உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-13

கோயிலுக்குப் பின்புறத்தில் பெரும்பாறையில் இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம் வலம்புரி விநாயகர் இடம் புரி வினாயகர் என்னும் இரண்டு வினாயகர் உருவங்களுக்கு மத்தியில் 13 ஒ 14 அடி பரப்புள்ள பாறையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம் அக்காலத்தில் (கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் மத்தியில்) தமிழ்நாட்டில் வழங்விந்த இசைகளைப்பற்றிக் கூறுகிறது.

17

வடமொழியிலே எழுதப்பட்டிருப்பதனாலே இந்தச் சாசனம் கூறும் விஷயம் தமிழ்நாட்டு இசையன்று என்று கருதக் கூடாது. தமிழ்நாட்டில் வழங்கிய இசையைத்தான் இந்தச் சாசனம் வட மொழியில் கூறுகிறது. வடமொழியில் சங்கீத நூல்கள் எழுதப் பட்டிருப்பதனாலே அவை தமிழ் நாட்டு இசையல்ல என்று கருதுவது தவறு. இப்போதுள்ள வடமொழி சங்கீத நூல்களில் பலதும் தமிழ்நாட்டு இசையைத்தான் கூறுகின்றன.

சங்கீத ரத்நாகரம்

கி.பி. 1210 முதல் 1247 வரையில் வாழ்ந்திருந்தவரும் சங்கீத ரத்நாகரம் என்னும் இசைநாடக நூலை வடமொழியில் எழுதியவரும் ஆன நிசங்க சார்ங்கதேவர் என்பவர் தமிழ் நாட்டிற்கு வந்து தமிழ் இசைகளை ஆராய்ந்து பின்னர் கி.பி.1237-இல் அந்நூலை எழுதினார் என்பர். அந்நூலிலே தேவாரப் பண்கள் சிலவும் கூறப்படுகின்றன. தமிழ் இசைதான் பிற்காலத்திலே கர்னாடக சங்கீதம் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது.

கீர்த்தனைகள்

கீர்த்தனைகள் என்று கூறப்படுகிற இசைப்பாடல்கள் மிகப் பிற்காலத்தில் தோன்றின. கீர்த்தனைகளைப் பற்றித் தமிழ்ப் பெரியார் திரு. வி.க. அவர்கள் கூறுவது இது:

66

"தமிழ்நாடு விருந்தோம்புவதில் பேர் பெற்றது. எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது. கீர்த்தனையால் நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது: தீங்கோ பெரிது.

66

'கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப் பட்டன. அந்நாளில் பெரும் பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத் தாண்டவர்,