உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 61

உபசார வார்த்தை என்றோ யாரும் கருதக்கூடாது. உவத்தல் வெறுத்தல் இல்லாத மேல்நாட்டு ஆசிரியர் கூறும் கருத்தையே கூறுகிறேன். "இந்திய நடனங்களிலே பெருமிதம் உடையது (தலை சிறந்தது) பரத நாட்டியம்” என்று இந்திய நடனக் கலைகளைப் பற்றி ஆராய்ந்து எழுதிய ஒரு அமெரிக்கர் "Bharata Natya. the Pride of Indian Dance” என்று கூறுகிறார்.41

தமிழ் நாடு, ஆந்திர நாடு, கர்நாடக நாடு முதலிய தென் இந்தியாவில் பரத நாட்டியம் இக் காலத்தில் பயிலப் பட்டாலும், இக் கலையை உண்டாக்கி வளர்த்துப் பாதுகாத்து வருபவர் தமிழரே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரத நாட்டியக் கலை தமிழ் நாட்டிலே வளர்க்கப்பட்டு வருகிறது. இக் காலத்திலும், நட்டுவர் என்று பெயர் கூறப்படுகிற தலைக்கோல் ஆசான்கள் தஞ்சாவூரிலே அதிகமாக இருக்கிறார்கள். இவர்களே இக் கலையைக் கற்றுங் கற்பித்தும் வருகிறார்கள்.

பரத நாட்டியக் கலையைப் பற்றித் தமிழிலும் வடமொழி யிலும் நூல்கள் உள்ளன. இக் கலையைப் பற்றி வடமொழியில் நூல்கள் எழுதப்பட்டிருப்பதனாலே இது வடநாட்டுக் கலை யென்றோ வடநாட்டவருக்குரிய தென்றோ கருதலாகாது. தமிழ் நாட்டிலே தமிழர்களால் தொன்று தொட்டு வளர்க்கப்பட்டு வருகிறது இந்தப் பரத நாட்டியக்கலை.

பரத நாட்டியம் இப்போதும் நமது நாட்டில் பயிலப்படுகிறது. பாடப்படும் பாட்டிற்கேற்ப அவிநயங்காட்டிப் பாவகம் தோன்ற ஆடிக்காட்டுதல். இது மகளிர்மட்டும் ஆடுதற்குரிய ஆடல். இதற்குக் கைக்குறியீடுகள் இன்றியமையாதன. கைக்குறியீடுகளை முத்திரை அடையாளம்) என்பர். இந்த முத்திரைகளின் பொருளை (அர்த்தத்தை) யறியாதவர் பரத நாட்டியத்தைச் சுவைத்து இன்புற முடியாது. ஆகவே, முத்திரைகள் இன்னதென்பதையும் அந்தந்த முத்திரை எந்தெந்தப் பொருளைக் குறிக்கின்றன என்பதையும் அறிந்தவரே பரத நாட்டியத்தை நன்றாகத் துய்ப்பார்கள்.

ஒற்றைக்கை

6

கை (முத்திரை) இரண்டு வகைப்படும். அவை, இணையா வினைக்கை, இணைக்கை என்பன.