உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*இசைக்கலை

மகேந்திரவர்மன்

காலத்தில் இசைக்கலை

மேன்மை பெற்றிருந்தது. நாடெங்கும் இசைப் பயிற்சியும் இசை யார்வமும் காணப்பட்டன. இந்த அரசன் காலத்தில் இருந்த பக்தி இயக்கத்தை வளர்த்த திருநாவுக்கரசர் இசைப்பாடல்களைப் பாடியே பக்தி இயக்கத்தை நாடெங்கும் பரப்பினார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் இசைப்பாடல்களே. இவர் காலத்தில் இசைக்கலை நாட்டில் பரவியிருந்தது என்பதை இவரது தேவாரப் பாடல்களில் காணப்படுகிற குறிப்புக்களிலிருந்து அறியலாம். அக் குறிப்புக்கள் சிலவற்றை இங்கே தருகிறோம்:-

"பண்பொருந்த இசைபாடும் பழனம். பஞ்சமம் பாடியாடும் தெள்ளியர். பண்ணினைப் பாடவைத்தார் பத்தர்கள் பயிலவைத்தார். பண்ணினாற் கின்னரங்கள் பத்தர்கள் பாடியாட இன்னிசை தொண்டர் பாட இருந்தார் ஆப்பாடியாரே. கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும். சீரொடு பாடலானார். பண்ணினார் முழவ மோவாப் பைப்பொழிற் பழனைமேய அண்ணலார். பாட்டினார் முழவமோவாப் பைம்பொழிற் பழனிமேயார் கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்கௗரி.

66

‘அந்தளி ராகம். ஏழிசை வண்ணம். பண்ணணார் பல்லியம் பாடி. ஏழ்நரம்பினோசை. ஏழ்நரம்பின் இசை. தொன்னரம்பின் இசை. பாட்டான் நல்ல தொடை. பண்ணிலங்கு பாடல் பண்பாடல். பாலையாழொடு செவ்வழிப் பண்கொள. யாழின் பாட்டு. பாவாய இன்னிசைகள் பாடி. பண்ணோடு யாழ்வீணை பயன். ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன்.

"குழலையாழ் மொழியார் இசை வேட்கையால், உழலை யாக்கையை யூணு முணர்விலீர். கொண்டபாணி கொடு கொட்டி தாளங்கைக் கொண்ட தொண்டர். குடமுழவம் வீணை தாளம். குழலோடு கொக்கரை தாளம் மொந்தை. பிடவம் மொந்தை * மகேந்திரவர்மன் (1955) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.