உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் ஓவியம் - அணிகலன்கள்

79

நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்" என்று நாரதரின் யாழிசையைக் கூறுகிறது. இதற்கு. "முதிய வேதத்தின் சிக்கை என்னு மங்கத்தை ஆராயும் முதனரம்பை உருவி வாசிக்கும் நாரதனா ரென்க. சிக்கை என்பது இசை” என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதுகிறார். இதில் நாரதசிக்ஷை என்னும் நூலை இவர் குறிப்பிடுவது காண்க.

மேற்படி ஆய்ச்சியர் குரவை ஒன்றன் பகுதி இரண்டாவது பாடலாகிய “மயிலெருத் துறழ்மேனி” என்னும் செய்யுளின் கடைசி அடி “குயிலுவருள் நாரதனார் கொளைபுணர் சீர் நரம்புளர்வார்" என்று கூறுகிறது. "குயிலுவ ருட் செறிப்புப் புணர்ந்திருக்கும் தாள வறுதியையுடைய நரம்பை உருவிவாசிக்கும் நாரதனா ரென்க” என்று உரையாசிரியர் எழுதுகிறார்.

திருஞானசம்பந்தர் அருளிய "திருவெழுகூற்றிருக்கை”யில், நாரதமுனிவரை ஏழிசையோன் என்று கூறுகிறார். “எச்சன் ஏழிசை யோன் கொச்சையை மெச்சினை” என்பது அவர் வாக்கு. இதில், எச்சன் என்பது இந்திரன், ஏழிசையோன் என்பது நாரதன். இதனாலும், தமிழ்நாட்டிலே நாரத முனிவர் வழியாக இசைக்கலை பயின்று வருகிறது என்பது தெரிகிறது. இசைத்தமிழ் வல்லவரான ஞான சம்பந்தரே இதைக் கூறுவது கருதத்தக்கது.

இதனால் நாரதரைப் பின்பற்றித் தமிழிசை மரபு வருகிறது என்பது தெரிகிறது. மகேந்திரவர்மனுடைய குடுமியாமலை இசைச் சாசனமும் இந்த மரபையே பின்பற்றியுள்ளது என்று ஆராய்ந்து பார்த்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.

யாழ்நூல் என்னும் இசைத்தமிழ் நூலினை இயற்றிய ஸ்ரீமத் விபுலாநந்த அடிகள் தமது நூலில் இதையே கூறுகிறார். "சார்ங்க தேவர் சொல்லுகிற சுத்தவுருவம், காகலியோடு கூடிய வுருவம், அந்தரத்தோடு கூடியவுருவம், காகலி அந்தரத்தோடு கூடிய வுருவம் எனும் நான்கினுள் காகலியோடு கூடியவுருவம் (குடுமியாமலை) கல்வெட்டிற் கொள்ளப்பட்டிலதாதலின், கல்வெட்டினைப் பொறித்த சிரியர் முற்றிலும் பழந்தமிழ் மரபினைக் கைக்கொள்கின்றார் என்பது தெளிவாகிறது” என்று அவர் எழுதுவது காண்க.

4

குடுமியாமலை இசைக்கலைக் கல்வெட்டைப்பற்றி விபுலாநந்த அடிகள் மேலும் எழுதுவது ஈண்டுக் கருதத்தக்கது. அவர் எழுதுவது வருமாறு: