உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*இசைக்கலை

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலே இசைக்கலை தமிழ்நாட்டிலே நன்கு பரவியிருந்தது. நாட்டிலே இசைக்கலைக்கு மதிப்பு ஏற்பட்டிருந்தபடியினால், இசைப்புலவர்கள் பலர் தோன்றி யிருந்தனர். கோயில்களிலே இசைப்பாடல்கள் பாடப்பட்டன. அக்காலத்திலிருந்த இசைப் புலவர்களின் பட்டியல் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், மூன்று சிறந்த இகைக்கலைஞர்கள் இருந்தார்கள் என்பது இலக்கியங்களினால் தெரிகிறது. அவ்விசைப் புலவர்கள் யார் என்றால், சுந்தரமூர்த்தி நாயனார், பாணபத்திரர், ஏமநாதர் என்பவர்கள்.

சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார் சிறந்த சிவபத்கராக இருந்ததோடு, உயர்ந்த இயற்றமிழ்ப் புலவராகவும் இசைத்தமிழ் வாணராகவும் விளங்கினார். அவர் பாடிய தேவாரப் பாடல்கள் இசைப்பாடல்களே. இந்தளம், தக்கராகம், நட்டராகம், கொல்லி, கொல்லிக்கௌவாணம், பழம்பஞ்சுரம், தக்கேசி. காந்தாரம், பியந்தைக் காந்தாரம், காந்தார பஞ்சமம், நட்டபாடை, புறநீர்மை, சீகாமரம், குறிஞ்சி, கவுசிகம், செந்து ருத்தி, பஞ்சமம் முதலிய பண்களில் இவருடைய தேவாரப் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடவுளே இசையுருவாக இருக்கிறார் என்பதும், அவர் சையைக் கேட்பதில் விருப்பமுள்ளவர் என்பதும் பெரியோர் கொள்கை. இதனைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கூறுகிறார்.

66

“ஏழிசையாய் இசைப் பயனாய்'

என்றும்,

“பண்ணுளீராய்ப் பாட்டுமானீர்

என்றும்,

பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்”2

  • மூன்றாம் நந்திவர்மன் (1958) நூலில் இடம் பெற்ற கட்டுரை.