உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் - அணிகலன்கள்

93

வேண்டும். இசைக் கலைஞர் திறமையைக் கூறுகிற சிலப்பதிகாரம் குழலோனின் திறமை எப்படியிருக்க வேண்டுமென்பதைக் கூறுகிறது.

“சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து புணர்ப் போன் பண்பின் வர்த்தனை நான்கும் மயலறப் பெய்தாங்கு ஏற்றிய குரல்இளி என்றிரு நரம்பின் ஒப்பக் கேட்கும் உணர்வின னாகிப் பண்ணமை குழலின் கண்ணெறி யறிந்து தண்ணிமை முதல்வன் தன்னொடும் பொருந்தி வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு இசையோன் பாடிய இசையின் இயற்கை வந்தது வளர்த்து வருவதொற்றி

இன்புற இயக்கி இசைபட வைத்து

வாரநிலத்தைக் கேடின்று வளர்த்தாங்கு

ஈர நிலத்தின் எழுத்தெழுத் தாக

வழுவின் றிசைக்குங் குழலோன்”.

(சிலம்பு, அரங்கேற்று காகை 56-69)

இதனை, அறிந்து மயலறப் பெய்து உணர்வினனாகி அறிந்து பொருந்தி வைத்து வளர்த்து ஒற்றி இயக்கி வைத்துப் பார்த்து இசைக்குங்குழலோன் என்று அன்வயப்படுத்துக.

பழைய அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இதற்கு விளக்கங் கூறியுள்ளனர். அவர்கள் கூறும் விளக்கங்களாவன:

சொல்லிய இயல்பு-இசை நூல்களிற் சொன்ன முறைமை. சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து-சித்திரப் புணர்ப்பும் வஞ்சனைப்புணர்ப்பு மென்று சொல்லப்பட்ட இரண்டு கூற்றினையும் அறிந்து; இவற்றுட் சித்திரப் புணர்ப்பாவது இசைகொள்ளும் எழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப் போலப் பண்ணீர்மை நிறுத்தல். வஞ்சனைப் புணர்ப்பாவது இசை கொள்ளா எழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்தல். புணர்ப்போன் பண்பின் புணர்க்கத்தக்க பாடலாசிரியனை ஒத்த அறிவினையுடையனாகி; வர்த்தனை நான்கும் மயலறப் பெய்தாங்கு- வங்கியத்து விரலுளர்ந் தூதுந் துளைகள் தர்ச்சனி முதலாக விட்டுப் பிடிப்பது ஆரோகண மாதலானும் கனிட்டன் முதலாக விட்டுப்