உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

101

ஈன்றாள் வருந்த விம்மைப்பிறந் தம்மைக் கிரங்கிநைய்யு மூன்றா முடிகொண் டொளிப்போ மெளிப்பட்டொருங்கிநின்றோம் தோன்றாழ் சிராமலை வாரியின் மூரித் தெய்வக்களிறேய் தோன்றா யெமக்கொரு நாள்வினைப் பாசத் துடரறவே.

துடரிடை யாத்த ஞமலியைப் போலிருந்தேனிச் சுற்றத்

திடரிடை யாப்பவிழ்த் தென்னைப் பணிகொள் பொன்னைப் புரையுஞ் சுடரிடை யாத்தபைங் கொன்றையு

மத்தமுஞ் சூழ்சடையின்

படரிடை யாத்த பரமன்

சிராமலைப் பால்வண்ணனே.

பால்வண்ண நீற் றெம்பரன்

சிராப்பள்ளிப் பரஞ்சுடர்தன்

பால்வணங் கண்டுநம் பல்வண்ண

நீங்கிப் பக்கத் திடஞ்சேர்

மால்வண்ணங் கண்டுதம் மால்வண்ணங் கொண்ட வளைசரிந்து

மால்வண்ணங் கொண்டுவந்தார் சென்று

காண்மின்கள் மங்கையிரே.

மங்கை யம்பார் கண்ணி பெண்ணுக்

கரைசி மலைமடந்தை கொங்கையம் பாரங்கள் போல்வா

னெழுந்து குவிந்தழிந்து பங்கயம் பாதங்கள் பொன்மலர்

பெறாதவர்ப் பொன்மலைமேற்

புங்கவன் பாதந் தொழு தொழிப்போ

93

94

95

மெங்கள் பொய்யுடம்பே.

96

பொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடியப் புழுப்பொதிந்த மெய்யினைக் காத்து வெறுத்தொழிந்தேன வியன்பொன்மலைமே லையனைத் தேவர்தங் கோனை யெம்மானை யம்மான் மறிசேர் கையனைக் காலனைக் காய்ந்த பிரானைக் கழல்பணிந்தே.

97