உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

111

அபிஷேகம் செய்யத் தேன், பால், பஞ்சகௌவ்யம் முதலிய பொருள்களைச் சிவலோகநாதன் என்பவர் அமைத்த தருமத்தை இச்செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

பூப்பாவை கோன் வீரராஜேந்திரர்க்காகப் புராரிகல நாப்பால் நவிற்றுஞ் சிவலோக நாதனென நறுதேன் ஆப்போ லோடைதொடும் வெண்காட்டரற் கமைப்பித்தவறங் காப்பா னவனென்னை ஆளுடை யானிக் கடலிடத்தே.

கச்சியர் கோன்

இடம் : தஞ்சாவூர் மாவட்டம், மாயவரம் தாலுகா, கடையூர். அமிர்தகடேசுவரர் கோவில் வாயிலின் வலது புறத்துச் சுவரில் எழுதப்பட்டுள்ள சாசனம்.

பதிப்பு: தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு : எண் 265. (No.265. S. I. I. Vol. XII.)

விளக்கம் : பல்லவ அரசன் ஒருவன் சோழனை வென்று அரசாண்டதை இச்செய்யுட்கள் கூறுகின்றன.

சாசனச் செய்யுள்

வார்மன்னு வெல்கழல் மானவன் பாலுங்கள் மாமரபிற் தார்மன்னர் பெற்ற தனுமக் கொடியித் தலம்புரக்கும் கார்மன்னு செம்பொற் கனகொடை மோகதென் கச்சிநற் போர்மன்னு வேள்பெற்ற தாரும் பெறாத புலிக்கொடியே. சிவனன்று நல்கிய செஞ்சின வேற்றுக் கொடியுயர்த்த தவனந் தருபரிக் கச்சியர் கோன்பச்சை யேயுயர்வித் தவனங் குலபதி தன்னுடன் போந்துதண் காவிரிநீர்ப்

1

புவனங் கொடுத்துக் கொண்டான் வன்பால் வெம்புலிக்கொடியே.2