உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

பதிப்பு:புதுக்கோட்டை சாசனங்கள், எண் 679 (No. 679. I. P.S.) விளக்கம் : சோளி வீரரயான் என்பவரைப் புகழ்கிறது இச்செய்யுள்.

சாசனச் செய்யுள்

வன்படையார் தேவியர்தம் மங்கலநாண் தட்டாணிக் கன்புரிய வோடாணி யாகுமே - இன்பப்

பரராசர் கோபாலன் பல்லவர்கோன் சோளி

வீரராயன் சிங்கார வாள்.

பாண்டியன் புகழ்

இடம் : புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, குடுமியா மலை. இம்மலை மேலுள்ள சிகாமணிநாத சுவாமி கோவில், இரண்டாங்கோபுர வாயிலின் வலதுபுறச் சுவரில் உள்ளது இந்தச் சாசனம்.

பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 651, 652. (No. 651, 652. I. P.S.)

விளக்கம் : பாண்டியன், சோழனை வென்று அரசாண்டதைக் கூறுகின்றன இச்செய்யுள்கள்.

சாசனச் செய்யுள்

தென்னவன் செய்ய பெருமான் திருமதுரை

மன்னவன்றன் மால்களிற்று வல்லிக்கும் - பொன்னிநாட்

டாலிக்குந் தானை அபையன் குலமகளிர்

தாலிக்கு மொன்றே தளை.

பொன்னி வளநாடு பாணன் பெறப்புரந்தான்

சென்னி திருமார்பிற் செயல்தீட்டினான் - முன்னே

புரமெறிவார் மண்சுமக்கப் பூபாரங் காத்தான்

தரமறியான் மீனவர்கோன் தான்.

குறிப்பு :- இரண்டாவது செய்யுளில் இரண்டாம் வரியில் செயல் தீட்டினான் என்பது சேல் தீட்டினான் என்றிருக்க வேண்டும். பாண்டியன், சோழ அரசனை வென்று அவனுடைய மார்பில் தன்னுடைய முத்திரையாகிய சேல்மீன் உருவத்தைப் பச்சை