உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

அதிவீரராமனின் தருமம்

டம் : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமி கோவில், பெரிய கோபுரத்தில் வடக்குச் சுவரில் உள்ள சாசனச் செய்யுள்.

பதிப்பு: "செந்தமிழ்”, தொகுதி 4, பக்கம் 120.

விளக்கம் : அதிவீரராம பாண்டியன் இக்கோவிலுக்கு வழங்கிய தானங்களைக் கூறுகிறது இச்செய்யுள்.

சாசனச் செய்யுள்

அத்தர் தென்காசி கண்டோன் கண்ட வாலையமு

மடியாரும் வாழ்வுபெற வந்

தழக னதீவீர ராமன் சறுவமானிய

மதாகக் கொடுத்த படிதான்

சித்திரைப் பரணியூர்த் தெண்ட கோஷப் பொன் திரும்பக் கொடுத்தவ் வூரிற் செங்கோட்டையார் கொண்ட பகுதியு நிறுத்தித் திருக்கோயிற் பகுதியாய்

வைத்ததை யறக்கழித் தாயங் கணக்குடன் மகாநவமி திருநாளிடை

வந்த காணிக்கை பாட்டப் பகுதி காணம்பல் வரியிவை யெலாங் கழித்துப்

பத்திரமாய்க் குண ராமநாதற்கு மேற்படி பணங்கழித் தடியர் வீட்டுப்

பணமுங் கழி. த்திப்படிச் சருவமானியப் பட்டையமு மருளி னானே.

குலசேகர பாண்டியன்

இடம் : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமி கோவில், தென்புறச் சுவரில் உள்ளச் செய்யுள்கள்.