உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

பராக்கிரம பாண்டியன்

123

இடம் : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமிக் கோவிலின், முன்புறம் இடிந்துள்ள கோபுரச் சுவரில் எழுதியுள்ள சாசனச் செய்யுள்கள்.

பதிப்பு : திருவாங்கூர், சாசனங்கள், முதல் தொகுதி, பக்கம் 96, 97. (T. A. S. Vol. I. Page. 96, 97)

விளக்கம் : அரிகேசரி பராக்கிரம பாண்டியன் இக் கோவிலைக் கட்டியதையும், பிறகு இக்கோவிலின் கோபுரத்தைக் கட்டத் தொடங்கியதையும், அவனுடைய சிறப்புக்களையும் இச்செய்யுள் கூறுகின்றன.

சாசனச் செய்யுள்

அன்பினுடன் சகாத்த மாயிரத்து முந்நூற்

றறுபத் தெட்டின்மேல் வைய்காசித் திங்கள்

மன்தியதி யீரைந்திற் பூருவ பக்க

மருவு தெசமியில் வெள்ளி வாரந்தன்னில் மின்திக ழுத்தரநாள் மீனத்தில் வாகைவே

லரிகேசரி பராக்கிரம மகிபன்

தென்திசையிற் காசிநாதர் கோயில் காணச்

சென்றுநின்று தரிழ்சணைதான் செய்வித்தானே.

பன்னு கலியுக நாலாயிரத் தைஞ்ஞூற் றைம்பத் தெட்டின் மேலெவரும் பணிந்து போற்றச் சென்னெல்வயற் றென்காசி நகரில் நற்கார்த்திகைத் திங்கள் தியதியைந்திற் செம்பொன் வார மன்னிய மார்கழிநாளில் மதுரை வேந்தன் வடிவெழு தொணாத பராக்கிரம மகிபன் சொன்ன வரைபோற் றிருக்கோபுரமுங் காணத் துடியிடையா யுபானமுதல் துடங்கி னானே.

சேலேறிய வயற் றென்காசி யாலையந் தெய்வச்செய லாலே சமைத்த திங்கென் செயலல்ல வதனையின்ன மேலே விரிவு செய்தே புரப்பாரடி வீழ்ந்தவர்தம்

பாலேவல் செய்து பணிவன் பாராக்கிரம பாண்டியனே.

1

2

3