உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

50 குணபதி யாயெங் குற்றங் கடியுங் கணவதியார் குமரர்க் கிருநூறு குழியு மாராய னான பிரா .

55

60

சூரிய தேவர்க் கிருநூறு குழியு மஞ்சொல்லா .

ததவ . .. செய்வான்

றிருக்களத்து மேல்பாற் பாலை நன்நில மொருவே லியுநற் பண்ணையும் . ழிந . பெண்ணை மேல்பாற் பசுவூர் நாற்பா லெல்லை யுட்பட நான்செய் புஞ்சை நன்னில நிகழு நான்மறை யவர்பாற் பொன்னற விட்டு மண்ணறக் கொண்டு தாரணி நிகழத் தன்கிளை வளரச்

சந்திரா தித்தர் தாமுள் ளளவும்

ஊழி வாழி யுரவுபெற வமைத்தனன் வாழி வாழி வையத் தினிதே.

139

குறிப்பு :- இச்செய்யுளின் இடையிடையே எழுத்துக்கள் மறைந்து விட்டபடியால், சில சொற்களின் உருவங்கள் தெரிய வில்லை. சாசனத்தைக் கல்லில் வெட்டியவரின் கைப்பிழையால் சில சொற்கள் பொருள் விளங்காமலிருக்கின்றன.

வரி 15. மாநெதி - மாநிதி. வரி 33. உமாசகிதன் திருமேனி உமாமகேசுவர மூர்த்தம். உமையும் மகேசுவரனும் ஒரே ஆசனத்தில் சுகாசன மூர்த்தமாக எழுந்தருளிய உருவம். வரி 40. குணர்ந்து காணர்ந்து, கொண்டுவந்து. வரி 60. “பொன்னறவிட்டு மண்ணறக் கொண்டு" இத்தொடர்மொழி வேறு பழைய சாசனங்களிலும் காணப்படுகின்றது. 'பொன்னறக் கொண்டு மண்ணறக் கொடுத்தோம்', 'பொன்னற இட்டு மண்ணறக் கொண்டேன்', 'பொருளற இட்டு விலையறக் கொண்டு' என்று சாசனங்களில் காணப்படுகின்றன. வரி 20, 61. தாரணி என்பது தரணி என்றிருத்தல் வேண்டும். தரணி - நிலம்,

பூமி.

"