உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

173

தடித்த பூணூல், பல்லவர் காலத்துச் சிற்பங்களில் காணப்படுவது போலவே இடது தோளின் மேலிருந்து மார்பின் மேல் வந்து வலது கையின் மேல் செல்லுகிறது.இவ்வித அமைப்புகளைக் கொண்டு, இந்தச் சிற்பம் பல்லவ அரசர் காலத்துச் சிற்பம் என்று உறுதியாகக் கூறலாம். இது மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோவிலைச் சேர்ந்து காணப்படுகிறபடியால், அக் கோயில் அமைக்கப்பட்ட காலத்தில் சிற்பம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கடற்கரைக் கோயிலை அமைத்தவன் சிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மன் ஆகையால், அவர் காலத்தில் சிற்பமும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதவாது இன்றைக்கு ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தச் சிற்ப உருவம், அருமையானக் கலைச் செல்வம்! நமது நாட்டிலே மூளை முடுக்குளில் போற்றுவார். அற்றுஅருமை பெருமை தெரியாமல் கிடக்கிற ஆயிரக்கணக்கான சிற்பக் கலைச் செல்வங்களில் இது ஒன்று. கடலிலிருந்து வீசும் குளிர்ந்த உப்பங் காற்றினாலும், வென்பனி மழையினாலும் தாக்குண்டு மழுங்கிப் போய், ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

திரிபுராந்தக மூர்த்தமாக அமைந்துள்ள இந்தச் சிற்ப உருவம், புராணக் கருத்தையும், சித்தாந்தக் கருத்தையும் எவ்வளவுத் தெளிவாகக் காட்டுகின்றது! இந்த உருவத்தில் காணப்படுகின்ற மழு, திரிசூலம், நாகப்பாம்பு முதலிய பொருள்களுக்கெல்லாம் ஒவ்வொரு சாத்திரக் கருத்து உண்டு. அவற்றை எல்லாம் இங்கு எழுத வேண்டிய அவசியம் இல்லை. இத்தகைய அருமையான சிற்ப உருவத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவருக்கும் உரிய கடமையாகும்.