உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

பழவேற்காட்டிலே, 350 ஆண்டுகளுக்கு முன்னே ஐரோப்பாக் கண்டத்திலிருந்து டச்சுக் காரர்கள் வந்தார்கள். வந்து 1610-ல் ஒரு கோட்டையைக் கட்டி அதில் இருந்து வியாபாரம் செய்தார்கள். அந்த வாணிகம் முக்கியமாக மலாக்கா, மலேயா நாடுகளுடன் நடை பெற்றது. ஆகவே பழவேற்காடு ஒரு நல்ல துறைமுகப் பட்டினமாக அமைந்தது. டச்சுக் காரர்கள் ஹாலண்டு தேசத்திலிருந்து வந்தவர்கள். இவர்களுக்குத் தமிழில் உல்லாந்தர் ஒல்லாந்தர் என்றும் பெயர் வழங்கிற்று. ஒல்லாந்தர் இருந்த பழவேற்காட்டுக் கோட்டையை கி.பி. 1781-இல் ஆங்கிலேயர் கைப்பற்றி அரசாண்டார்கள். ஆங்கிலேயர் பழவேற்காட்டைப் புலிக்காட் என்றனர். புலிகள் உள்ள காடுகள் அல்ல. பழவேற்காடு என்னும் சொல் ஆங்கிலேயன் வாயில் நுழையாமல் புலிகாட் ஆயிற்று.

பழவேற்காட்டுக்குத் தெற்கே கடற்கரையோரமாக இருப்பது சிந்தாமணிகோயில் என்பது. சிந்தாமணி கோவிலுக்குக் கீழைக்கோ கர்ணம் என்னும் பெயரும் உண்டு. ஏனென்றால், மேற்குக் கடற்கரை ஓரமாக, தென் கன்னடம் மாவட்டத்தில் கோகர்கர்ணம் என்னும் ஒரு க்ஷேத்திரம் இருக்கிறது. அதற்கு நேர்கிழக்கில் இந்தச் சிந்தாமணி கோயில் இருப்பதனால் இதற்குக் கீழைக்கோகர்ணம் என்று பெயர். இந்த இடத்தில், சோழர் காலத்தில் ஒரு துறைமுகம் இருந்ததென்று அங்குள்ள சாசனத்தினால் தெரிகிறது.

ս

சிந்தாமணி கோயிலுக்குத் தெற்கே திருக்காட்டுப் பள்ளி என்னும் ஊர் இருக்கிறது. சாதாரணமாகக் காட்டுப் பள்ளி என்று கூறுவார்கள். திருக்காட்டுப் பள்ளியில் யஜ்ஞமட்டன் என்பார் யஜ்ஞேஸ்லாம் என்னும் கோயிலைக் கட்டினான். இந்த யஜ்ஞ பட்டம், நந்தி வர்மனுடைய புரோகிதன் மூன்றாம் நந்திவர்மன் என்றும் தெள்ளா றெறிந்த நந்திவர்மன் என்றும் கூறப்படுகிற நந்திக் கம்பலத்தின் தலைவ னாகிய நந்திவர்மனுடைய புரோகிதன். திருக்காட்டுப்பள்ளிக் கோவிலுக்கு தெள்ளாறெறிந்த நந்திவர்மன் நிலங்களைத் தானம் செய்திருக்கிறான் என்பதை அவனுடைய செப்பேட்டுச் சாசனத் தினால் அறிகிறோம்.

கடைசியாக பழவேற்காட்டு ஏரியைப் பற்றிச் சொல்ல வேண்டும். இந்த ஏரி இப்போது கடலுடன் சேர்ந்து கடலின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. முற்காலத்தில் இது காயல் ஆக இருந்தது என்று கூறுவர்.