உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

179

அளற்று நாட்டுக்கோன், 'சாத்தம் பெருமான் என்பவர்களிடம் இந்தப் பொற் காசுகளைக் கொடுத்தனுப்பி, நித்திய பூசைகள் நடைபெறுவதற்கு இவ்வரசன் ஏற்பாடு செய்தான். இதிலிருந்து அந்தக் காலத்தில் (1100 ஆண்டுகளுக்கு முன்னரே) திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் நடைபெற நித்திய பூசைகளின் விவரம் நன்கு தெரிகின்றது. அதனைக் கீழே தருகிறோம்:-

பபூ

சுப்பிரமணி படாரர் கோயில், திருமூலத் தானத்துக்குப் படாரர்க்கு உரிய நித்தியப்படி விவரம் பின்வருமாறு:-

திருவமுது : அரிசி, செந்நெற்றீட்டல் ஒருவேளைக்கு நானாழியாக, நான்கு வேளைக்கு அரிசி பதினாறு நாழி.

நெய்யமுது: திருவமுதுக்குப் பசுவின் நறுநெய், ஒரு வேளைக்கு நாழி. ஒரு வேளைக்கு உழக்கு "கறி துமிக்கவும் பொரிக்கவும் ஒரு வேளைக்கு ஆழாக்காக நான்கு வேளைக்கு நெய்யமுது நாழி உரி”

தயிரமுது: நிவேதிக்க தயிரமுது ஒரு வேளைக்கு ஒரு நாழி. கடுத்தயிர் அமுது ஒரு வேளைக்கு உரி. ஆகநான்கு வேளைக்குப் பசுவின் தோய் தயிர் ஆறு நாழி.

வாழைப்பழ அமுது: ஒரு வேளைக்கு நான்கு பழமாக நான்கு வேளைக்கு வாழைப்பழம் பதினாறு.

சர்க்கரை அமுது: ஒரு வேளைக்கு ஒரு பலமாக நான்கு; வேளைக்கு நான்கு பலம்.

கறி அமுது: காய்கறி ஒன்று, புளிங்கறி ஒன்று, புழுக்குக் கறி ஒன்று, பொரிக்கறி ஒன்று ஆகக் கறி அமுது நான்கினுக்கு ஒரு வேளைக்குப் பத்துப்பலமாக நான்கு வேளைக்குக் கறி அமுது நாற்பது

பலம்.

காயம் : மிளகு அமுது, மஞ்சளமுது, சீரக அமுது, சிறுகடுகு அமுது, கொத்தம் பரி அமுது; ஆகக்காயம் ஐந்து. இவை ஒரு வேளைக்கு முருச்செவிடாக நான்கு வேளைக்கு காயம் உழக்கே இரு செவிடு.

கும்மாயம் : (கும்மாயம் என்பது சிறுபயற்று அவியலுடன் வெல்லமும் நெய்யும் கலந்து செய்வது). இதற்குச் சிறு பயற்றுப் பருப்பு ஒரு வேளைக்கு உரியாக நான்கு வேளைக்கு இரு நாழி சிறுபயிறு.