உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

181

கொற்று: தட்டளி கொட்டிகளுக்கு (வாத்தியம் வாசிப் போருக்கு), கொற்று (சோறு), திங்கள் ஒன்றுக்கு நாலுகலம் பத்துக் குறுணி நாழி உரியாக, பன்னிரண்டு திங்களுக்கு நெல்லு நிறைமதி நாராயத்தால் ஐம்பத்தேழுகலம்.

ஸ்ரீஉடையாடை:- மூன்று திங்களுக்கு ஓர் இணையாக நான்கு முறைக்கு ஸ்ரீஉடையாடை.

நாலிணை: இன்னொரு ஸ்ரீஉடையாடை ஆண்டுக்கு நாலிணை. திருமஞ்சன நெய்: "திருமஞ்சனம் ஆடி அருளப் பசுவின் நறுநெய் நியதி நான்குநாழி.

சந்தனக் குழம்பு : "திருமேனி பூசும் சந்தனக் குழம்புச் சந்தனம் நியதி முப்பலம்.

و,

கற்பூரம்: திருமேனி பூசும் திருச்சந்தனத் தோடு கட்டி அரைக்கும் கற்பூரம் நியதி ஏழரைக் காணம்.

திருமஞ்சன இளநீர்: “திருமஞ்சனம் ஆடி இளநீர் வழுவை (வழுக்கை) உட்பட, நியதி இருநாழியினுக்கு நாழி இளநீருக்கு நாலிள நீராக, நியதி இடும் இளநீர் “எட்டு”

(குறிப்பு : கற்பூர தீபம் இதில் குறிப்பிட வில்லை. அக்காலத்தில் கற்பூரத்தீபம் வழக்கத்தில் இல்லை போலும். அது பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்கமாக இருக்கலாம். தேங்காய் உடைப்பதும் குறிப்பிடப்படவில்லை. இதுவும் பிற்காலத்து ஏற்பட்ட வழக்கம் போலும். தேவாரப் பாடல்களிலும் கற்பூர தீபாரதனை குறிப்பிடப் படவில்லை).

சிவபக்தனான வரகுண பாண்டியனுடைய பக்தி, இந்தக் கட்டளையிலிருந்து நன்கு தெரிகிறது. இது சுந்தர மூர்த்தி சுவாமிகள் வாழ்ந்திருந்த 9-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சாசனம் என்பது கருதத்தக்கது.