உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்கள்*

(லீடன் செப்பேடுகள்)

பெரியச் செப்பேடு' இராஜராஜசோழன் I. வழங்கியது.

இச் செப்பேட்டில் வடமொழிப் பகுதி, தமிழ்ப்பகுதி என்னும் இரண்டுப் பகுதிகள் உள்ளன. வடமொழிப் பகுதியின் தமிழாக்கம் இது:-

1. ஸ்வஸ்திஸ்ரீ. திருமகளின் காஸ்மீரத் தைலம் பூசப்பெற்ற மங்கைச் சுவடுகள் பொருந்திய மார்பையும், சுழலுகின்ற உயர்ந்த தரமலையுடன் உராயும்போது மின்னுகிற பொன்னாலான தோள்வளை களையும், ஒளியினால் மின்னுகின்ற சார்ங்கம் முதலிய படைகளை ஏந்திய... க்கைகளையும், நீலமேனியையும் உடைய மூன்று உலகங்களையும் காத்தருளுகிற திருமால், மேன்மேலும் செல்வத்தை அருள்வானாக.

2.இளம்பிறை சூடிய சிவபெருமான் பெருமாட்டியுடன் கயிலாய மலையில் விளையாடிக் கொண்டிருக்கிற காலம் வரையிலும், திருமால் பாற்கடலிலே அரவணையிலே அறிதுயில் கொண்டிருக்கிற காலம் வரையிலும், உலகங்களுக் கெல்லாம் ஒரே ஒளியாக உள்ள பகலவன் உலகத்தில் இருளை ஓட்டிக் கொண்டிருக்கிற காலம் வரையிலும் சோழர் பரம்பரை துன்பங்களை நீக்கி உலகத்தைக் காத்தருள்வதாக.

3.உலகத்தின் ஒரே கண்ணாக விளங்கும் சூரியனிடமிருந்து, அரசர்களில் முதல்வனாகிய மனு பிறந்தான். அதன் பிறகு அவன் மகன், அரசர்களின் மணிமுடிகள் தீண்டப்பட்ட கால்களையுடைய வாகு பிறந்தான். அவன் குடியில், நற்குணங்களுக்கு உறை விடமானவனும், பிரமனுக்கு நிகரானவனும் லோகா லோகமலை வரையில் உலகத்தை நீதியோடு அரசாண்ட மாந்தாத்ரி பிறந்தான்.

  • பௌத்தமும் தமிழும் (1940) நூலில் இடம் ெபற்ற கட்டுரை.