உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

173 முதல் 86 - வரிகள்) பல நூல்களாகிய கடலின் கரை கண்டவனும், அரசர்களின் மணிமுடிகளிலிருந்து வீசும் ஒளியினாலே பொன்போல் விளங்கும் கால்மணையுடையவனும் ஆன இந்த அரசன் இராஜகேசரிவர்மன் இராஜராஜன் தனது 21 ஆவது ஆண்டில் இதனை வழங்கினான்.

அரசன்,

தன்னுடைய அறிவின் மேன்மையினாலே தேவகுருவை வென்றவனும், கற்றறிந்தவர் என்னும் தாமரைக் காட்டிற்கு ஓர் சூரியன் போன்றவனும், இரவலர்களுக்குக் கற்பகமரம் போன்றவனும், சைலேந்திர குலத்தில் பிறந்தவனும், ஸ்ரீவிஷயநாட்டின் தலைவனும் டதஹா தேசத்தை ஆட்சி செய்பவனும், மகரமுத்திரையுடையவனும், அரசதந்திரம் எல்லாம் அறிந்த சூளாமணிவர்மனின் குமாரனும் ஆன புகழ்பெற்ற மாறவிஜயோத்துங்கவர்மன் என்னும் கோயில்களாலும், சத்திரங்களாலும், தண்ணீர் பந்தல்களாலும், பூங்காவனங்களினாலும், மாளிகைகளினாலும் மகிழ்ச்சிக்குரியதாக விளங்கும் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டின் பட்டனக் கூற்றத்தில் உள்ள உலகத்துக்குத் திலகம் போன்ற நாகப்பட்டனத்திலே, தன் உயரத்தினாலே கனககிரியையும் சிறியதாகச் செய்து தன் அழகினால் வியப்படையச் செய்கிற சூளாமணிவிகாரை என்று தன் தகப்பனார் பெயரால் அமைத்த புத்தர் பெருமான் கோவிலுக்கு (இராஜராஜன்) வழங்கினான்.

"

மேற்கூறிய நாட்டில் பட்டனக் கூற்றத்தில் பிடிசூழ்ந்து பிடாகை நடத்தி எல்லையமைத்து யானைமங்கலம் என்னும் ஊரைத் தானமாக (இராஜராஜன்) வழங்கினான்.

செய்யுள் : 35 - 36. ஆற்றல் வாய்ந்த அரசன் (இராஜராஜன்) தெய்வமான பிறகு (இறந்த பிறகு), அவனுடைய அறிவு வாய்ந்த மகன் மதுராந்தகன் சிம்மாசனம் ஏறித் தன் தந்தையாகிய சக்கரவர்த்தியினால் தானமாக வழங்கப்பட்ட ஊரைச் சாசனம் செய்து கொடுத்தான்.

37. ஆதிசேஷன் இந்த உலகத்தைத் தாங்குகிற வரையிலும் இந்த விகாரைக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தானம் நிலை பெறுவதாக.

38. நல்லொழுக்கத்துக்கு உறைவிடமான, மிக்க ஆற்றல் வாய்ந்த இந்தக் கடாக தேசத்து அரசன், எதிர்காலத்து அரசர்களை இவ்வாறு வேண்டிக் கொள்கிறான் : “இந்த என்னுடைய அறச்செயலை எக்காலத்திலும் காத்தருளுங்கள்.