உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள் 23 உலகத்துக்குப் பயன்படாமல் உள்ளன. இப்போது எனக்குக் கிடைத்தவரையில் சாசனச் செய்யுள்களை அச்சிடுகிறேன். இந்த நூலில் உள்ள செய்யுட்கள், தமிழ் இலக்கியத்தை ஆராய்வதற்கும், பண்டைக் காலத்துச் சமுதாய வாழ்க்கை நிலை. அரசியல் நிலை, வரலாற்றுச் செய்தி முதலியவைகளை ஆராய்வதற்கும் பெரிதும் பயன்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

சாசனச் செய்யுள் மஞ்சரி' என்னும் இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு உதவிபுரியவேண்டுமென்று டில்லியில் உள்ள சாகித்திய அக்கடமி என்னும் கழகத்தைக் கேட்டுக்கொண்டேன். அக்கழகத்தார் தமது தமிழ்க் குழுவின் மூலமாக இத்தொகுப்பை ஆராய்ந்து, அக்குழுவின் இசைவு பெற்று, இந்நூலை வெளியிடும் செலவுக்காக ரூபா ஐந்நூறு நன்கொடையாக வழங்க உடன்பட்டனர். ஆகவே இந்நூல் சாகித்திய அக்கடமின் ஆதரவில் வெளிவருகிறது. இவ்வுதவியை அளித்தருளிய சாகித்திய அக்கடமிக்கும், அதன் தமிழ்க் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மயிலாப்பூர், சென்னை

15-3-1959

சீனி.வேங்கடசாமி