உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

11 - ஆம் ஆண்டு

தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர் வீரட்டானேசுவரர் கோயிலில் உள்ளசாசனம்.

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12. 13.

சாசனம் 12

ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நந்திவிக்கிரம பரும ற்கு யாண்டு பதினொன்றாவது மலாட்டுக் கு றுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர்த் தி ருவீரட்டானத்து மாதேவர்க்கு நந்தாவிள க்கிரவும் பகலும் மிரண்டு விளக்கெரிப்பத ற்கு விடேல் விடுகு இளங்கோ அதியரைய னாயி .........விக்ரமபூதி மகள் விடே

.....யின சாத்தன் மறவன் றேவி பூதி .விடேல் விடுகு கல்லால் நி ....ன்னிறை நாற்பத்தெண் க சை கழஞ்சின் வாய்த் திங் ட்டுவதாக திருக் கோவலூர் த்தார் கைய்வழி வைத்தது

13 -ஆம் ஆண்டு

வட ஆர்க்காடு மாவட்டம், அரக்கோணம் தாலுகா, காவேரிப் பாக்கம் முத்தீசுவரர் கோவில் கோபுரவாயிலின் உள்ளில் உள்ளது.

நந்திவர்மனின் 13-ஆம் ஆண்டு இடப்பட்ட இச் சாசனம், அய்யக்கி பங்கள அடிகளின் மருமகள் கோயிலில் விளக்கெரிப்பதற் காக 5 கழஞ்சு பொன் தானம் கொடுத்ததைக் கூறுகிறது. இடை யிடையே எழுத்துக்கள் காணப்படவில்லை. கடைசியில் சுவர் மறைந்துள்ளது.

சாசனம்13

1. ஸ்வஸ்திஸ்ரீ நந்திவர்மருக்கு யாண்டு பதின்மூன்றாவது எம்மூர் அய்யக்கி பங்கள அடிகள் மருமகள் பக்கல் அஞ்கழஞ்.....