உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

3.

4.

5.

6.

7.

8.

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

வது விடேல் விடுகு முத்தரை

யந் அடியான் கிட்காவற் காத்தா

ன் நியமமாகாளத்து பிடாரி யாற் கொரு திருவிளக்கிநுக் கும் ஒரு திருவமுர்துக்கு மு தலாக இப்பிடாரியார் உள் 9. ளூர்களில் கல்லிக்குடுத்த 10. நிலம் அரை காணிக்கடன் 11. ஜ50 இது பன்மாஹெஸ்வ

12. ர ரக்ஷை.

அம்பா சமுத்திரத்துச் சாசனம்

திருநெல்வேலி மாவட்டத்து அம்பா சமுத்திரம் தாலுகாவில் அம்பா சமுத்திரம் என்னும் ஊர் இருக்கிறது. இதன் பழைய பெயர் இளங்கோக்குடி அல்லது இளங் கோயிக்குடி என்பது. இங்கு இப்போது, எரிச்ச உடையார் கோயில் என்று வழங்கப்படுகிற சிவன் கோவில் இருக்கிறது. இக்கோயிலுக்குப் பழைய பெயர் திருப்போத்துடையார் கோயில் என்பது. இக் கோயிலில் வரகுண பாண்டியனுடைய சாசனம் ஒன்று வட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அச்சாசனத்தின் வாசகம் இது :

1.

2.

3.

4.

5.

6.

7.

ஸ்வஸ்தி ஸ்ரீ படரரனுக் கிரஹத்தினா

ற் முள்ளி நாட்டிளங் கோக் குடி தி

ருப்போத்துடையார் ஸ்ரீகோயில் படார(ர்)க்கு முதல் கெடாமை பொலி கொண்டு நான்கு காலமுந் திருவமு து செலுத்துவதாக வரகுண மஹாராஜர் தொண்டை நாட்டுப் பெண்ணைக்கரை அரைசூர் வீற்றிருந்து இளங் கோக் கு டிச் சவையார் கைய்யிற் குடுத்த காசு இருநூற்று தொ ண்ணூறு இவற்றாற் காசின் வாயிரு கலமாக ஆண்டு வரை சவையா ரளக்கும் பொலி நெல் ஐந்நூற் நூற் றெண்பதை 10. ங் கலம் இவை கொண்டு படாரர் பணிமக்களும் இளங் 11. கோக் குடிச் சவையாரும் உடனின்று வரகுண 12. மஹாராஜர்க்கு ராஜ்யவர்ஷம் நான்காவதுக்கு எதிர்

8.

9.