உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

போர்செய்த வீரபாண்டியனும் ஒரே ஆளா? வீரபாண்டியன் என்னும் பெயருள்ள வேறு பாண்டியரும் இருந்திருக்கக் கூடும் அல்லவா? இருவரும் ஒரே பாண்டியனுடன் போர்செய்தார்கள் என்பதற்குச் சான்று என்ன? வீரபாண்டியன் என்னும் பெயர் ஒற்றுமை மட்டுந்தானே சான்றாக இருக்கிறது? எனவே, பெரிதும் ஐயத்திற்கிடமானதும் தெளிவான சான்று இல்லாததுமான இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

3. பூதிவிக்கிரமகேசரியின் பாட்டனான பரதுர்க்க மர்த்தனன், வாதாபிஜித் (வாதாபிநகரத்தை வென்றவன்) என்னும் சிறப்புப் பெயருடையவன் என்று கொடும்பாளூர் சாசனம் கூறுகிறது. வாதாபி நகரம் கி.பி 642-இல் நரசிம்மவர்மனால் வெல்லப்பட்டது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து முடிவுகட்டிய உண்மை. அந்த வாதாபிப்போரில், கொடும்பாளூர் அரசன் பரதுர்க்கமர்த்தனனும் கலந்துகொண்டு போரைவென்று வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். ஆனால் பூதிவிக்கிரம கேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று சாசன எழுத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு முடிவு செய்து கொண்ட சிலர், பூதிவிக்கிரமகேசரியின் பாட்டனான பரதுர்க்கமர்த்தனன் வாதாபிப் போரை கி.பி. 642-இல் வென்று வாதாபிஜித் என்று பெயர்பெற்றான் என்று சுறினால், அது இவர்கள் காட்டும் 10-ஆம் நூற்றாண்டுக்குப் பொருந்தவில்லை யாகையால், பரதுர்க்கமர்த்தனன் செய்த வாதாபிப்போர் பிற்காலத்தில் நடந்த இன்னொரு வாதாபிப் போராக இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். அஃதாவது, இரண்டு வாதாபிப்போர் நடந்ததென்றும் முதலாவது போர், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்திலும், இரண்டாவது போர் 9-ஆம் நூற்றாண்டிலும் நடந்ததென்று இவர்கள் யூகிக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் யூகிக்கிறார்களே தவிர சாசனங்களோ சரித்திரமோ இலக்கியமோ யாதொரு சான்றையும் இவர்கள் காட்டவில்லை. ஆதாரமற்ற வெறும் யூகத்தைமட்டும் சான்றாகக் கொண்டு சரித்திரம் எழுதுவது பைத்தியக்காரத்தனமாகும்.

பூதிவிக்கிரமகேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று சரித்திர ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் எழுதியதற்கு ஏற்பவே, அவருடைய மாணவியாகிய டாக்டர் மீனாட்சியும் “பல்லவர் ஆட்சி” என்னும் நூலில் எழுதுகிறார். இவரும் சான்றுகள் இல்லாமலே யூகம் செய்துகொண்டு எழுதுகிறார். தெள்ளாரெறிந்த நந்திவர்மன்

-