உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் நிகழ்ந்த வாதாபிப்போரிலேதான் என்பது தெளிவாகிறது.

கி.பி. 642-இல், இரண்டாம் புலிகேசி காலத்தில், பல்லவ நரசிம்மவர்மன் நடத்திய வாதாபி போருக்குச் சாசனச் சான்றுகளும் இலக்கிகயச் சான்றுகளும் உள்ளன. அதன்பிறகு மற்றொரு வாதாபிப் போர் நடந்ததாக இது வரையில் யாதொரு சான்றும் கிடையாது. னால், மேற் கூறியவர்கள் மட்டும் இரண்டாவது வாதாபிப் போர் நடந்ததாக யூகிக்கிறார்கள். பேரனான பூதி விக்ரம கேசரியை கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று இவர்கள் முடிவு செய்து விட்டபடியால், பாட்டனான பரதுர்க்கமர்த்தனன் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்து வாதாபிப் போரை வென்றான் என்று கூறினால் உலகம் நகைக்கும் அல்லவா? ஆகவே, ஆதாரம் இல்லா விட்டாலும் பிற்காலத்தில், இரண்டாவது வாதாபிப் போர் நடந்திருக்க வேண்டும் என்று இவர்கள் யூகித்துக் கற்பனை செய்துகொண்டார்கள். நரசிம்மவர்மன் காலத்தில், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் நடந்த வாதாபிப் போரில், வாதாபி ஜித்தாகிய பரதுர்க்க மர்த்தனன் இருந்தான் என்று சொல்ல இவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆகவே, ஆதாரம் இல்லாத இண்டாவது வாதாபிப் போரை வர்கள் கற்ப கற்பனைசெய்து எழுதிவைத்து விட்டார்கள். இவர்கள் கற்பனையை, உண்மையை நாடுவோர், எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கொடும்பாளூர் மூவர் கோயில் சாசனம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுச் செய்திகளைக் கூறுகிறது என்று 'ஹீராஸ் பாதிரியாரும் ஆரோக்கியசாமியும் கூறுகிற முடியு சரியானதென்று கொள்கிறோம்.

4. வெறும் யூகம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு சரித்திர ஆராய்ச்சி செய்கிற இவர்கள் மேலும் “ஆராய்ந்து" முடிவு கூறுகிறார்கள். இவர்கள் கூறுவது வருமாறு:

8

இராஜகேசரி வர்மன் காலத்துச் சாசனமும் பரகேசரி வர்மன் காலத்துச் சாசனமும் இளங்கோவேள் ஆன மறவன் பூதி என்பவர் பெயரைக் கூறுகின்றன. இவற்றில் ஒன்று மறவன் பூதியின் மனைவியான கற்றளிப் பிராட்டியைக் கூறுகிறது. இவற்றில் பூதி, கற்றளி என்னும் பெயர்கள் கூறப்படுவதால், பூதி விக்ரம கேசரிக்கு இளங்கோ வேள் மறவன் பூதி என்னும் பெயரும் உண்டு என்றும், மறவன் பூதியின் மனைவி கற்றளிப் பிராட்டி, பூதி விக்ரம கேசரியின் மனைவி