உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

கமடன் என்பவன் கோழிப்பாம்பாகப் பிறந்து திரிந்தான் என்று ஸ்ரீ புராணம் கூறுகிறது.

பாகுபலி, என்றும் புஜபலி என்றும் பெயருள்ள முனிவருடைய உருவச்சிலையை 525 வில் உயரமுடையதாகப் பொன்னால் செய்து பரதச் சக்கரவர்த்தி பௌதனபுரத்தில் அமைத்தார் என்றும் அவ்வுருவச்சிலையைச் சூழ்ந்து கோழிப்பாம்புகள் வசித்து வந்தபடியினாலே மனிதர் யாரும் அதன் அருகில் செல்ல முடியாம லிருந்தது என்றும் கன்னட நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு புலவர் களால் நூல்களிலே கூறப்படுகிற குக்குடசர்ப்பம் என்னும் கோழிப் பாம்பு எப்படி யிருக்கம்? அதன் உருவ அமைப்பு எப்படிப்பட்டது?

சீவக சிந்தாமணி பதுமையார் இலம்பகத்தில், “நங்கை தன் முகத்தை நோக்கி” என்னும் செய்யுள் உரையில், உரையாசிரியர் நச்சினார்க்கினியர், கோழிப்பாம்பைப் பற்றிய செய்தியொன்று கூறுகிறார்.

"நங்கைதன் முகத்தை நோக்கி நகைமதி யிதுவென் றெண்ணி அங்குறை யரவு தீண்டி அவ்வையோ என்று போகக் கொங்கலர் கோதை நங்கை யடிகளோ வென்று கொம்பேர் செங்கயற் கண்ணி தோழி திருமகட் சென்று சேர்ந்தான்.”

என்பது அச்செய்யுள். இதில், குறை யரவு என்பதற்கு நச்சினார்க் கினியர் கூறும் விளக்கமாவது : "குறையரவு வினைத்தொகை. காலம் நீட்டித்தாற் பாம்பு குறைந்து ஒரு கோழிப் பறவை நீளம் பறந்து செல்லுமென்று கூறி, அதனைக் குக்குட சர்ப்ப மென்ப.

இந்த விளக்கத்தினால், பாம்புக்கு ஆயுள் நீளமானால் அதன் உடல் குறுகி, கோழி பறக்கும் தூரம் பறக்கும் ஆற்றல் அடையும் என்பதும் இதற்குக் கோழிப்பாம்பு என்பது பெயர் என்பதும் விளங்குகிறது.

மைசூரில் தொட்டபெட்டா என்றும் விந்தியகிரி என்றும் இரத்தினகிரி என்றும் பெயருள்ள மலையின் மேல் பாகுபலி முநிவரின் உருவம் ஒரு பெரும் பாறையில் அமைக்கப்பட்டிக்கிறது. பாகுபலி முனிவரின் அருகில் குக்குட சர்ப்பங்கள் வசித்திருந்தன என்னும் புராணக் கதைக்கு ஏற்ப, இவ் வுருவத்திற்கு அருகிலே கோழிப்பாம்பின் உருவம், ஒன்று கல்லில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் உருவம்,