உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

திராவிடம்

297

“சுலிய நாட்டிலிருந்து கல்லும் காடும் உள்ள 1500 அல்லது 1600 லீ தூரத்தைக் கடந்து த-லொ-பி-து நாட்டுக்கு யாத்திரிகர் சென்றார். இது 6000 லீ-க்கு மேற்பட்ட சுற்றளவுள்ளது. இதன் தலைநகரம் கஞ்-சிஹ்- பு- லொ என்பது. இது 30 லீ சுற்றளவுள்ளது. செழிப்பான நில வளம் உள்ளது. பூக்களும் பழங்களும் நிறைந்து, உயர்ந்த பொருள்களை விளைவிக்கின்றன. இந் நாட்டுமக்கள் அச்ச மற்றவர்களாய் முழுதும் நம்பத்தக்கவர்களாயுள்ளனர். பொது நலக் கருத்துள்ளவரும் கல்விக்கு பெருமதிப்புக் கொடுக்கிறவரும் ஆக இருக்கிறார்கள். இவர்கள் பேசும் எழுதும் மொழி மத்திய இந்தியாவின் மொழிக்கு மாறுபட்டது. இங்கு 100-க்கு மேற்பட்ட பௌத்தப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1000-க்கு மேற்பட்ட பிக்ஷுக்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஸ்தவிர பௌத்த பிரிவினர் தேவாலயங்கள் 80-க்கு மேற்பட்டவையுள்ளன. இவைகளில் பெரும்பாலும்

திகம்பரர்களுக்குரியது. இந்தத்

தேசத்திற்கு முற்காலத்தில் புத்தர் பெருமான் அடிக்கடி எழுந்தருளியிருந்தார். இந்தப் பிரதேசத்திலே புத்தர் பெருமான் எங்கெங்கு எழுந்தருளி உபதேசம் செய்து மக்களைப் பௌத்தராக்கினாரோ அங்கங்கெல்லாம், அசோக சக்கரவர்த்தி பள்ளிகளைக் கட்டினார். இந் நாட்டுத் தலைநகரம் தர்மபால பூசா அவர்கள் பிறந்த நகரமாகும்.......

وو

"தலைநகருக்கு அருகிலே பௌத்த விகாரை யுண்டு இந்த விகாரை, இந்நாட்டிலே கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் கூடுகிற டமாகவுள்ளது. இங்கு 100 அடி உயரம் உள்ளதும், அசோகர் காலத்தில் கட்டப்பட்டதும் ஆன ஒரு பள்ளி இருந்தது. இந்த இடத்தில் புத்தர் பெருமான் தீர்தகரரை உபதேசத்தினால் வென்று பெருந்தொகையினரான மக்களைப் பௌத்தராக்கினார். நான்கு புத்தர்கள் முற்காலத்தில் இங்குத் தங்கின இடமும் உண்டு.

-

993

இதில் த - லொ - பி - து என்பது திராவிட என்பதாகும்: அதாவது திராவிட தேசம். கஞ்சிஹ்புலொ என்பது காஞ்சீபுரம்.4

யுவான் சுவாங் உடைய வரலாறு காஞ்சீபுரத்தைப் பற்றிய சில செய்திகளைக் கூறுகிறது. அதுவருமாறு :- காஞ்சீபுரம் இலங்கைக்குச் செல்வதற்குரிய ஒரு துறைமுகப் பட்டினமாக இருக்கிறது. இங்கிருந்து இலங்கைக்குப் போக மூன்று நாளாகும். யாத்திரிகர் (யுவான் சுவாங்)