உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

301

பண்டைக்காலத்தில் பாரத நாட்டிலும் தமிழ் நாட்டிலும் அடிமைகள் இருந்தனர். மனிதர் தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்டனர். அடிமைகளுக்குப் பிறந்த சந்ததிகளும் அடிமைகளாகவே வாழ்ந்தனர்; அடிமைகளையுடையவர்கள், ஆடு மாடுகளை விற்பதுபோல, தங்களிடமிருந்த அடிமைகளை விலைக்கு விற்றனர்; ஆடு மாடுகளைப் போலவே அடிமைக் கூட்டமும் இருந்தது என்று கூறினால், பலருக்கு புதுமையாக இருக்கும் ; சிலர் நம்பவும் மாட்டார்கள். இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அடிமைகள் இருந்தார்களா? ‘இது என்ன புதுமை!' என்று வாசகர்கள் வியப் படைவார்கள்.

பண்டைக்காலத்தில் தமிழ் நாட்டிலும் ஆயிரக்கணக்கான மனித அடிமைகள் வாழ்ந்து வந்தார்கள். செல்வம் உள்ளவர் அக்காலத்தில் காசு கொடுத்து ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கி னார்கள். அடிமைகள் வேண்டாதபோது அவர்களை காசுக்கு விற்றார்கள். சமீப காலத்தில், உலகம் முழுவதும் மனித அடிமை கூடாது என்று சட்டம் செய்யப்பட்டபிறகு, ஏனைய நாடுகளில் அடிமைத் தன்மை விலக்கப்பட்டது போலவே, தமிழ் நாட்டிலும் அடிமை முறை விலக்கப்பட்டது.

பண்டைக்காலத்தில்

இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அடிமைகள் இருந்தார்கள் என்பதற்குச் சாசனச் சான்றுகளும் ஆதாரங் களும் உள்ளன. ஆனால் இந்திய சரித்திரத்திலும் தமிழ் நாட்டுச் சரித்திரத்திலும் மனித அடிமைகளைப் பற்றிய செய்தி எழுதப்பட வில்லை. இந்நாட்டில், மக்கள் சமுகத்தில் நடைமுறையில் இருந்த அடிமைத்தனத்தைப் பற்றிய செய்தி இந்திய சரித்திரத்திலும் தமிழ் நாட்டுச் சரித்திரலும் ஏன் இடம் பெறவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் ஆட்சியில் திருவாடுதுறைக் கோவிலுக்கு ஒரு பெண் மகள் அடிமையாக விற்கப்பட்டாள் என்னும் செய்தியை அக்கோவிலில் உள்ள ஒரு சாசனம் கூறுகிறது.

ஜெயங்கொண்ட சோழவள நாட்டில், ஆக்கூர்நாட்டு கலைச் செங்காடு என்னும் ஊரில் உள்ள திருவளம்பூர் உடையார் கோயிலுக்கு எட்டு ஆட்கள் அடிமையாக விற்கப்பட்டனர். இவர்களை விற்றவன்