உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடைவாவி மண்டபம்*

இந்த நடைவாவிற்கு நூறு கல் தூரத்திலே மற்றொரு பழைய நடைவாவி, தூர்ந்து போய் மறைந்து கிடக்கிறது. அதன் வாயில் நிலைமட்டும் நடை வாசி போன்ற அழகான அமைப்பும் சிற்ப வேலை பாடுகளுடன் இன்று நின்று கொண்டிருக்கிறது. ஆர்க்கியாலஜி இலாகா இதற்கு இன்னும் பாதுகாப்பு அளிக்காத காரணம் தெரிய வில்லை.

கார் வசதி உள்ளவர்கள், இந் நடை வாவிக் கிணற்றைச் சித்திராப் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பட்ட பகலில் சென்று அவகாசத் தோடு காணலாம். கோயில் அதிகாரிகள் இந்த நடை வாவியை ஒரு மாதம் வரையிலாவது தண்ணீர் சுரக்காமல் வைத்து இதை பொது மக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வது நல்ல சித்திரக் கலை காட்சிகள் இதில் அடக்கம் இல்லையானாலும், கட்டடச் சிற்ப அமைப்பு காணத்தக்க காட்சியாகும் நாளது சித்திரா பௌர்ணமி வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் ஒரு முறை போய் பாருங்கள்.

  • * *
  • நண்பன். மலர் 3, 1958.