உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

5

LO

10

15

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

கோப்பெருஞ் சிங்கன் குரைகழற் காடவன்

சொன்மறை யாக்கன் சுடர்வா ளெடுத்துப் பின்வர நடந்து பிலந்திறந் தருளிய காவலர் தம்பிரான் கண்ணா ரமுத ரருண மால்வரைப் பெருமாள் தமக்குச் செய்த திருப்பணி தெரிந்தெடுத்துரைப்பிற் காதிற் கம்பியுங் கதிர்மணி மகுடமும் செங்கதி ரெரிக்கு மங்க சுத்தமும்

பாகு வலையமும் பைம்பொற் பலதொழிற் கீழிடும்

பேதை பாதமும் பிறங்கிருட் கண்டமு மிளஞா யிற்றி னெழினிறந் தோன்ற வளர்மா ணிக்க வாளிவெயி லரும்பிய விரிகட லவனி யாளப் பிறந்தான்

திருவா சிகையுஞ் சிங்கா சனமும் 20 கற்பக விருக்கமு முத்தின் பந்தலு மோடரி மைக்க ணுமையிசை பாடி ஆடிய வதிருங் கழற்பெரு மாளுக் கினமா ணிக்க மிலங்கச் செய்த பரதம் வல்ல பெருமா ளென்னுந் 25 திருவா சிகையுஞ் சிறந்த செங்கதி

ரொளி விளங்கு மாணிக்கமுந் துளங்கும் வயிரமுங் கட்டிய பொலன்தருக் கூட

மஞ்சனமுங் கண்ணா ரமுதர்காமக் கோட்டத் துண்ணா முலையா முமையவள் தனக்குப் 30 பருமணி நிரைத்த திருவுடை யாடையும் வென்றிவேல் கொண்டு குன்றெறி முருகன் செந்நிற மேனியுந் தேவியர் மேனியு மைஞ்ஞி றத் தோகை வண்ணமு மடையப் பொன்னிற மாக்கிய பொற்பணி பலவு மல்லை காவல னிச்சங்க மல்லன்

35

பல்லவர் வேந்தன் பரதம் வல்லன் கூட லவனி யாளப் பிறந்தான்

செய்தன விப்பணி யடங்கவு மிவன்சிறந் தூழி காலம் வாழி இவன்மகன்