உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

75

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

மலைத்தளம் பறித்தம் மன்னவர் சுமந்தச் சிலைத்தளங் கொண்டு செய்தசிலைத் தளமு மெல்லையி லுகந்தொறுஞ் செல்வந் தொலையாது வரும்படி வகுத்த நிச்சங்க மல்லன்

பெரும்பண் டாரமும் பிறைமுடிப் பெருமா 80 ளின்னாள் வந்திருந் தமைதோன் றவு முன்னா ளமைந்த முறைமை காணவும்

90

வாட்டடங் கண்ணியர் மனைத்தொறும் பலிகொளக் காட்டிய வடிவிற் கங்காள வேடமும் வான்முகத் தமரர் வணங்கச் செய்த

85 நான்முகத் தெரு நாயகி தனக்கு மப்படி வகுத்த வணிநெடுந் தெருவுஞ் செப்பிய கதிரவர் திசைவலம் போதும் சோதி நன்மணி வீதிகள் இலங்கக் கலைபயில் தவத்தோர் நிலைபெற விருக்க மலைவகுத் தனைய காங்கயன் மடமுங் கானிற் பயிலுங் கடவுளர் தமக்கு வேனிற் றென்றல் வியன்பெருங் கவரி யிருமருங் கிரட்டவு மிமையவர் துதிக்கவு மருமணம் பெருகிய வாள்வல பெருமாள் 95 திருநெடுந் தோப்புந் தீத்த மாகிய

வமுத நன்னதி யனைத்திலுங் தூய தமி ணாடு காத்த பெருமாள் தடாகமும் வண்டிசை பாடல் மதுமலர் வாசங் கொண்ட காடவ குமாரன் தோப்புங் 100 கவின் வெம்பரிக் கதிர்வழி தடுத்த வவனி யாளப் பிறந்தான் தோப்பும் தலநிகழ் சேனைத் தலைவன் தோப்பும் வெம்மை நாளில் வெஞ்சுர னடைந்தவர் தம்மனங் குளிரத் தண்டலை நிழற்செயு 105 மம்மை மடமு மைய்ய னேரியும்

வெற்பகந் துளைத்தெனக் கற்புடை யராகி யடனெடும் பிலத்தி லமுதுவந் தெழுந்த வடிவாள் வல்ல பெருமாள் கிணறு மளிமுரல் கமலமு மாம்பலு மலர்ந்து