உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

வரி 43. 'மெவுகையு' என்பது ‘உதகையு' என்றிருத்தல் வேண்டும்.

129 வரி முதல் 132 வரி வரையில், சிவபெருமான் நாய் வேடங் கொண்டு கங்கையை ஏற்ற செய்தி கூறப்படுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பங்களில் கங்காதரமூர்த்தி உருவத்தில், சிவபெருமான் கங்கையைத் தாங்குகிற உருவம் இருப்பதைக் காண்கிறோம். பிற்காலத்துக் கங்காதரமூர்த்தி சிற்ப உருவத்தில் நாய் உருவம் காணப்பட வில்லை. இந்தச் சாசனத்தில் நாயின் உருவம் குறிப்பிடப் பட்டிருப்பது கருதத்தக்கது.

காடவராயர்

இடம் : வடஆர்க்காடு மாவட்டம், செய்யாறு தாலுகா, அத்தி கிராமம் இவ்வூர் அகத்தீசுவரர் கோவில், திருவுண்ணாழிகைத் தென்புறச் சுவரில் உள்ள சாசனம்.

பதிப்பு : எண் 125. தென் இந்திய சாசனங்கள், தொகுதி LIGOT G0FT GOOT . (No. 125. S.I.I. Vol. XII.)

விளக்கம் தொண்டைமண்டலங் கொண்ட பல்லவ வாண்டா ரான காடவராயரின் சிறப்பைக் கூறுகின்றன இச்செய்யுட்கள். பல்லவ அரசர்களுக்குக் காடவராயர் என்பது பெயர்

சாசனச் செய்யுள்

ஸ்வஸ்திஸ்ரீ. கூடல் ஆளப் பிறந்தாரான காடவராயர் மகனார் தொண்டைமண்டலங் கொண்ட பல்லவாண்டாரான காடவராயர்

கல்வெட்டு.

தங்கோ நகர்பெறத் தம்புவி தாம்பெறத் தான்வணங்கிய செங்கோல் வளைக்கை யாரிவை ரோடும் அடியுங் கையும்

பங்கேருக மன்ன பல்லவன் காடவன் பார்முழுதா

னெங்கோ னனுமதந் தோளிலிடா மன்ன ரெம்மன்னரே.

1

பொருதிக் கிலுஞ்சென்று போர்வென்ற பல்லவன் காடவர் கோன் கருதிப் பொரச்சென்று சேவூரினிற் றிருக்கண் சிவக்கப் பருதிக்கு மேலுமுயர் பிணக்குன்றிற் பரந்திழிந்த

குருதிப்புனல் தொண்டை நன்னாடடங்கலுங் கொண்டதுவே. 2