உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

49

சோழ

செய்யுள் 4. திரிபுவனத் திராசக்கள் தம்பிரான் அரசர்களின் தலைவன். சோழ அரசர்கள் தம்மைத் திரிபுவன சக்கரவர்த்திகள் என்று கூறிக்கொள்வது வழக்கம். கோப்பெருஞ் சிங்கன், சோழனைப் போரில் வென்று அவனைச் சிறைவைத்துச் சோழ நாட்டை யரசாண்ட படியினாலே, திரிபுவனத் திராசாக்கள் தம்பிரான் என்று புகழப்படுகிறான்.

செய்யுள் 5. மல்லை - மாமல்லபுரம். இப்போது மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது. இது பண்டைக் காலத்தில் பல்லவ அரசர்களின் துறைமுகப்பட்டினம். சீயன் - சிங்கன்; அதாவது கோப்பெருஞ் சிங்கன்.

கோப்பெருஞ் சிங்கன் என்னும் பெயருடைய பல்லவ அரசர்கள் இருவர் இருந்தனர். அவ்விருவரில் இந்தக் கோப்பெருஞ் சிங்கன் முதலாமவன். இவன், ஏறத்தாழ கி.பி. 1232-இல் சிம்மாசனம் ஏறினான் என்பர். தெள்ளாற்றுப் போரிலே இவனால் சிறைபிடிக்கப்பட்ட சோழன், கி.பி. 1216-இல் முடிசூடிக்கொண்ட மூன்றாம் இராஜாஜன் என்பர்.

வீரவீர ஜினாலயம்

இடம் : வடஆர்காடு மாவட்டம், ஆரணி தாலுகா, பூண்டி. இவ்வூர் பொன்னிநாதர் ஆலயம் என்னும் ஜைனக் கோவிலின் மேற்குப் புறச்சுவரில் உள்ள சாசனச் செய்யுள்.

பதிப்பு : எண் 62. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No. 62. S.I.I. Vol. VII.)

விளக்கம் : இந்த அழகான அகவற்பா, ஒரு அரசன் வீரவீர ஜினாலயத்துக்குத் தானதருமங்கள் செய்ததைக் கூறுகிறது. வீரவீர ஜினாலயம் என்பது பொன்னிநாதர் கோவில். இந்தச் செய்யுளின் இடையிடையே சில எழுத்துக்கள் மறைந்து விட்டன.

சிறப்பருளிக்

சாசனச் செய்யுள்

கொற்றவன் மகிழ்ந்த கொள்கைய னாகி

மெய்த்தவத் தீர்க்கு வேண்டுவ தியாதென