உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

40

45

வந்தன பிறவு மாற்றி வளமலி

மாளிகை யெடுக்கவு மணிக்குலை கமுகு நாளி கேரமு நன்குட னாக்கவுங்

கரும்புஞ் செந்நெலு மொருங்குட னடவுஞ் சண்பகந் தமனகஞ் சாதி கேதகை வண்கழு நீருடன் மலர்பல வியற்றவும்

ஞ் செக்கு மமைக்கவு மருளிச் சாலையுந் தவமுந் தருமமுந் தழைப்பச் செம்பிலுங் கல்லிலுஞ் செய்து தன்புக ழலர்கதி ரளவுஞ் செல்ல

மலர்தலை யுலகின் வாழ்வமைத் தனனே.

51

குறிப்பு :- வரி 5. செயங்கொண்ட சோழ மண்டலம் - தொண்டை மண்டலம். வரி 13. சினவரசன் - ஜினன், அருகன். வரி 15. சினாலயம் – அருகன் கோவில்.

ஆலத்தூர் திவாகரன்

குடியாத்தம் தாலுகா,

இடம் : வடஆர்க்காடு மாவட்டம்,

திருவல்லம். இவ்வூர் பில்வநாதேசுவரர் கோவிலின் மகாமண்டபத்துத் தென்புறச் சுவரில் உள்ள செய்யுள் சாசனம்.

பதிப்பு : எண் 325. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு (No. 325. S.I.I. Vol. IV.)

விளக்கம் வல்லத்துப் பில்வநாதேசுவரர் கோவில், முற்காலத்தில் திருவல்லத்து ஆழ்வார் கோயில் என்று பெயர் பெற்றிருந்தது. இக்கோவில் பூசைக்காக ஆலத்தூர் திவாகரன் என்பவர் தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

ஆலத்தூ ராளி திவாகரன்தான் செய்வித்தான் பாலொத்த வெள்ளி நாற்பதின் கழஞ்சால் - சோலைத்

திருவலத்தே யாழ்வார் திருப்பல்லிக்குச் செல்வம்

வருநலத்தான் கொள்கைதான் மற்று.

திருவுண்ணாழிகையார் வசம்.