உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

விளக்கம்

கூறுகின்றன.

53

சுந்தரபாண்டியனின் வெற்றிச் சிறப்பைக்

சாசனச் செய்யுள்

காரேற்ற தண்டலைக் காவிரி நாடனைக் கானுலவுந் தேரேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்ந்து தாரேற்ற வெம்படை யாரியர் தண்டுபடத் தனியே

போரேற்று நின்ற பெருவார்த்தை யின்றும் புதுவார்த்தையே.

பண்பட்ட மென்மொழிப் பைந்தொடி கொங்கையர்க் கவைமேற் கண்பட்ட முத்தவடங் கண்டு காக்கிலன் காடவர்கோன் எண்பட்ட சேனை யெதிர்பட் டொழுக வெழுந்த புண்ணீர் விண்பட்ட டலையப் படைதொட்ட சுந்தர மீனவனே.

குறிப்பு :- செந்தமிழ் தென்னவன்-சடாவர்மன் சுந்தர பாண்டியன். செய்யுள் 2. காடவர்கோன் பல்லவ அரசன்; இவன் கோப்பெருஞ் சிங்கன் போலும். சுந்தர மீனவன் - சுந்தர பாண்டியன்.

சுந்தரபாண்டியன்

இடம் : தென்ஆர்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கிழக்குக் கோபுரவாயிலின் வலதுபுறச் சுவரில் உள்ள சாசனம்.

பதிப்பு : எண் 619. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.619. S.I.I. Vol. IV.)

விளக்கம் : சுந்தரபாண்டியன் வென்ற போர்க்களத்தின் உவமை. சாசனச் செய்யுள்

வட்ட வெண்குடை மன்னர் தம்புகல்

கொண்டு மாமுடி கொண்டுபோர்

மாறு கொண்டெழு போசளன் தடை கொண்டு வாணன் வனம்புகத்