உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

களைச் செய்துள்ளார். திருவாங்கூர் சாசனங்கள் மேலும் பல்வேறு தனிப்பட்டவர்கள் தொகுத்த கல்வெட்டுத் தொகுதிகள் ஆகியவற்றி லிருந்தும் இவர் இச்செய்யுட்களைத் தொகுத்துள்ளார்.

மயிலை சீனி.வேங்கடசாமி செய்த இப்பணியை வேறு யாரும் தொடரவில்லை. இவர் தொகுத்த காலத்திற்குப் பின்பு அச்சிடப் பட்டுள்ள கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிகுதியாகும். இவற்றிலும் இவ்வகையான செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றைத் தொகுப்பது தமிழ் வரலாற்றியலுக்குச் செய்யும் மிகச் சிறந்த பணியாகும்.

இத்தொகுப்பில் திருவக்கரை, திருக்காரிக்கரை, திருப்பாலை வனம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் பற்றி மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. லீடன் செப்பேடுகள் என்பவை தமிழில் ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்கள் என்று அழைக்கப்படுகிறது. இச்செப்பேட்டை பௌத்தமும் தமிழும் நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் இணைத்திருந்தார்கள். பொருள் ஒழுங்கு கருதி அப்பகுதி இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு தமிழ்ச்சாசனங்களில் உள்ள அரிய வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்துள்ளது.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை - 96 ஏப்ரல் 2010

தங்கள் வீ. அரசு

தமிழ்ப்பேராசிரியர்

தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம்