உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

67

யார்க்கு தண்ணீர் அமுது செய்தருள இட்ட மிண்டம் ஒன்றினால் குடிநற்கல் நிறை மதுராந்தகன் மாடையோடு ஒக்கும் பொன் 50 . ஐம்பதின் கழஞ்சு. உ

நானிலத்தை முழுதாண்ட சயதரற்கு

நாற்பத்து நாலாண்டில்

மீனநிகழ் நாயற்று வெள்ளிபெற்ற

உரோகிணிநா ளிடபம்போதால் தேனிலவு பொழிற்றில்லை நாயகர் தன் கோயிலெலாம் செம்பொன் மேய்ந்தா ளேனவருந் தொழுதேத்தும் ராஜராஜன் குந்தவை பூவிந்தையாளே.

தில்லைநாகய தேவற்குத் திருக்கண்ணாடியும் இட்டார். உ

ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு காம்போச ராஜன் காட்சியாகக் காட்டின கல்லு. இது உடையார் ராஜேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பல முடையார் கோவிலில் முன் வைத்தது. உ

இந்தக் கல்லு திருவெதிரம்பலத்து திருக்கல் சரத்தில் திருமுன் பத்திக்கு மேலைப்பத்தியிலே வைத்தது. உ

குறிப்பு :- இந்தச் செய்யுளில் சயதரன் என்பது முதலாங் குலோத்துங்க சோழனின் சிறப்புப் பெயராகும். அவனுடைய நாற்பத்து நாலாம் ஆண்டில். குந்தவையார் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்ததாக இச் செய்யுள் கூறுகிறது. சயதரனுடைய 44-ஆம் ஆண்டு கி.பி. 1114 என்பர் சரித்திர நூலோர். இந்தக் குந்தவையார், ஸ்ரீ .இராஜராஜ சோழன் மகளும் குலோத்துங்க சோழன் தங்கையும் ஆவார். இவர் சிதம்பரக் கோவிலைப் பொன் வேய்ந்ததோடு, வேறு சில தானங்களையும் செய்ததை இச்செய்யுளும் வசனமும் கூறுகின்றன.

அன்றியும், இராஜேந்திர சோழனுக்குக் காம்போச அரசன் கல் ஒன்றைக் காட்சிப் பொருளாக அளித்ததையும், அக்கல் சிற்றம் பலத்தின் எதிரம்பலத்தில் வைக்கப்பட்டதையும் இந்தச் சாசனம் கூறுகிறது.