உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

கூத்தொழில் கேளா தேத்தொழில் முனைந்த கண்டர் கரிசறத் துரிசறக் கலிசெக

240 மண்டல சுகதியில் வயப்புலி வளர்த்தோன் வான்பால் மதியும் வலம்புரி யிடம்பரி யான்பால் வதியும் விரிசடைக் கடவுள் நெற்றிக் கண்ணும் நிலத்தவர் நினைந்த தெற்றிக் கண்ணுஞ் சிந்தா மணியும் 245 போலப் பிறந்த புகழோன் கோலக் கருங்களிற் றுழவன் கம்பத் தடிகள் மாதி விடங்கு வருபரி வல்ல

வீதி விடங்கன் மென்கருப் பாலைத் தலந்தருந் தண்டலைத் தடநீர்

250 நலந்தரு பொன்னி நாடுகிழ வோனே.

வேலியார்கோன் வீதிவிடங்கள் விறற்கம்ப னாலியல்மான் சோழ னதிகாரி - கோலப்

1

படியின்மேற் பொற்பூப் பைங்கோவல் வீரட்டர் முடியின்மேல் வைத்தான் முயன்று.

2

பொன்முகக் கழஞ்சால் மணிப்பட்டம் பூம்புனைந்து

மின்மிக்க கட்டமைத்து மேற்கட்டி - சொன்மிக்க

கோவலன் வீரட்டற் கீந்தான் குலவேலி

காவலான் வாழ்கம்பன் கண்டு.

3

சென்னி திறற் ஸ்ரீராஜ ராஜற் கியாண்டு

திகழு மிருபத்தேழிற் செழுநீர் வேலி மன்னிய கம்பன் மஹிமாலைய மூவேந்த

வேளான் விண்ணப்பத்தால் மணிநீர்க் கோவ

லென்னியல்சீர் வீரட்டத் திலங்க மொன்று

பொன்னூற்றாற் செய்ததற்கு வெள்ளிப் பீடம்

பன்னிய தொண்ணூற்றறு முக்கழஞ்சுடை யம்பொன்

பேர்த்தும் அய்ங்கழஞ்சின் மேற் பத்துமாவே.

4