உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

79

வீதிவிடங்கன் - இவன் இராஜராஜ சோழனின் ஒரு உத்தியோகஸ்தன். அருமொழி – அருமொழித் தேவர்; இது இராஜராஜ சோழனின் பெயர்.

காடவர்கோன் பாவை

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, சிற்றாமூர். இவ்வூர் மலைநாதர் கோவிலின் பின்புறமுள்ள பொடாவின் அடியில் உள்ள செய்யுள்.

பதிப்பு : எண் 830. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No.830. S.I.I. Vol. VII.)

விளக்கம் : சிற்றாமூர் மலைநாதர் கோவில் ஜைனக் கோவில். இக்கோவிலுக்குச் சோழ அரசியார் தருமஞ் செய்ததை இச் செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

காடவர்கோன் பாவை கனைகழற்காற் சோழற்கு நீடுபுகழ்த் தேவியார் நீணிலத்துப் - பீடுசிறந் தமரும் சிற்றாமூர் செய்திறங்கல் மீட்பித் தறம்பெருக வாக்கு மவள்.

குறிப்பு :- காடவர் கோன் பாவை – பல்லவ அரசன் மகள். இவர் சோழ அரசனை மணந்தார். இவர், நிலத்தைச் செப்பனிட்டு அதனை இக்கோவிலுக்குத் தானமாக வழங்கினார்.

புத்தன் இராசசிங்கன்

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, திண்டீசுவரர் கோவில் முன் மண்டபத்துத் தெடன புறச் சுவரில் உள்ள செய்யுள்.

பதிப்பு : எண் 837. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No.837. S.I.I. Vol. VII.)