உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

சாசனச் செய்யுள்

அரசநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயன் கண்டராதித்தன் வாசலில் கல்வெட்டுவித்தபடி.

வரிவளை பொலம்பூண் கொடுத்த மங்கையர் மயலுற மனந்தான் துடக்கு கின்றன மதிகதி ரிரண்டாங் கெனச் சிறந்தொளிர் வயிரமு மிசைத்தாங் கிடப் பிசைந்தன பரிமள தளந்தான் சமைத்த குங்கும பரிவொடு பசுஞ்சாந் தெழக் கமழ்ந்தன பலிகொள விரந்தாங் குமிக்க சிங்களர் பரவையில் விழுந்தாங் கெடத் துடர்ந்தன கரிபரி உடன்சேர்ந் தெடுத்த கங்கர்கள் கருவரை யிடந்தான் புகக் கடந்தன கனலென வுகந்தான் சுடத் துடங்கிய கலிவலி பெலந்தான் புகத் துரந்தன

வரிபெற விரந்தான் தடக்கை ஒன்றினி லகலிட முகந்தாம் புனற் சொரிந்தன வரசரை நெடுஞ்சரங் கிடக்கை கொண்டன அழகிய வளந்தான் திருப்பு யங்களே.

இது வளந்தானாரான காடவராயர் கவி.

அங்குலவும் வயற்பெறுகை ஆட்கொள்ளி காடவர்கோன் பங்குலவு மதசானை பதநிகளம் விடுகின்றா

1

னிலங்குமணி முடியரசர் யார்கொலோ விணையடியில் விலங்கு கலின் கலினென்ன வீதிதொறும் வருவாரே.

2

இது இவர் மகனார் ஆட்கொள்ளியாரான காடவராயர் கவி.

பொருகாம னம்பு புகுந்துயிர்மே லன்றிச்

பாகாகா மாலியானைக் கண்டு பணிந்தானை

மோகாகா வந்திபடா முன்.

செருகா விடையாமஞ் செல்லா - தொருகாலும்

3